சுதந்திர தினம் அப்டினா சின்ன வயசுல எனக்கு பல விஷயங்கள் ஞாபகம் வருது. School அன்னைக்கு Leave அப்டினாலும் காலையில school dress போட்டுட்டு தேசிய கொடிய நெஞ்சில குத்திட்டு சைக்கிள்லயும் ஒரு கொடி வாங்கி handle bar-க்கு நடுவுல fix பண்ணிட்டு ஸ்கூல் போய் HM ஏத்துற தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துற விதமா salute பண்ணிட்டு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு நம்மளோட தேச கடமை முடிஞ்சதுரா அப்டின்ற feel ஓட வீட்டுக்கு வருவேன்.
ஆனா அப்படிபட்ட சுதந்திரத்துக்கு பின்னாடி பல பேரோட ரத்தம் வேர்வை சிந்தப்பட்டு இருக்கு அப்டின்றதுலாம் later ah தான் புரிஞ்சது. நம்ம நெறய பேருக்கு அப்டி தான் இருந்து இருக்கும். நமக்கு தெரிஞ்ச சுதந்திர போராட்ட வீரர்கள் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜவஹரலால் நேரு, பால கங்காதர திலகர் மாதிரி சில பேர் தான்.
ஆனா தமிழ்நாட்ட சேர்ந்த பல பேர் நாட்டோட சுதந்திரத்துக்காக போராடி வீர மரணம் அடஞ்சி இருக்காங்க. தீரன் சின்ன மலைல தொடங்கி, மாவீரன் அழகு முத்து கோன், கொடி காத்த குமரன், தாத்தா ரெட்டை மலை சீனிவாசன், VO சிதம்பரம் பிள்ளை, வீரபாண்டிய கட்ட பொம்மன், பாரதியார், வீர மங்கை வேலுநாச்சியார், வாஞ்சிநாதன், மருது பாண்டியர் அப்டினு இந்த பட்டியல் ரொம்ப நீளம்.
உரிமைக்கான குரல் ஒலிச்சிட்டே இருந்த காலம் அது. சுதந்திரம் அப்டின்றது வெறும் வார்த்தை இல்ல. இது ஒரு சித்தாந்தம். பல நூற்றாண்டுகளா நம் முன்னோர்களுக்கு மறுக்கப்பட்ட பிறப்புரிமை. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிரா குரல் கொடுத்த விடுதலை போராட்ட வீரர்களுக்கு பரிசா கிடைச்சது அடியும் உதையும் ரத்தமும் தான்.
அதெல்லாம் ஒரு பொருட்டா எடுத்துக்காம நாட்டோட சுதந்திரத்துக்காக உயிரையும் கொடுக்க தயாரா இருந்த காரணத்துனால தான் இன்னைக்கு நாம சுதந்திர காத்த சுவாசிக்க முடியுது. நாட்டுக்கு ஒண்ணுனா நமக்கு ஒன்னுனு நினைச்சி ஒற்றுமை உணர்வோட, தேசப்பற்றோட நாம குரல் கொடுக்கணும்.
விடுதலை போராட்ட வீரர்களை நினைவு படுத்துறதுக்காக மட்டும் நாம இந்த நாள கொண்டாடல, ஏற்றதாழ்வு, பாகுபாடு இல்லாம அனைவரும் இந்த நாட்டுல சமம் அப்டின்றத நினைவு படுத்தவும் தான் இந்த நாள கொண்டாடுறோம். தேசிய கொடிக்கும் தேச தலைவர்களுக்கும் தலை வணங்கி இந்தியாவின் 78 வது சுதந்திர தின வாழ்த்துகள சொல்லிக்கறது உங்களில் ஒருவன், தமிழ் பேசும் இந்தியன்.