இப்போ நாம வாழ்ந்துட்டு இருக்க இந்த நவ நாகரிக உலகத்துல மன அழுத்தம் அப்படின்றது எல்லாருக்குமே இருக்க ஒரு பொதுவான பிரச்சனையா இருக்கு. முன்னாடி எல்லாம் இந்த மன அழுத்தம் அப்படின்ற வார்த்தைய 40 வயசுக்கு மேற்பட்டவங்க பயன்படுத்தி தான் நம்ம கேள்விப்பட்டிருக்கோம்.
இப்போலாம் அஞ்சு வயசு குழந்தைகள்ல இருந்து 55 வயசு பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே மன அழுத்தம் இருக்கு. மன நலத்துக்கும் உடல் நலத்துக்கும் பெரிய சம்பந்தம் இருக்கு. மனம் நல்லா இருந்தது அப்படின்னா தான் உடல் நலமும் நல்லா இருக்கும். இது இரண்டையும் ஒரே நேரத்துல ஆரோக்கியமா வச்சிக்கிறது எப்படி? ரொம்ப எளிமையான விஷயம்தான்… அதுக்கு நாம யோகா பண்ணனும்.
ஆமாங்க 24 மணி நேரம் இப்ப யாருக்குமே பத்துறது கிடையாது. அந்த அளவுக்கு வேலை அதிகமா இருக்கு. எல்லாருக்கும் என்ன இருந்தாலும் நம்மளுடைய உடம்பு மனசு ஆரோக்கியமா இருந்தா மட்டும்தான் நாம அடுத்தடுத்து வாழ்க்கையில நம்ம நினைச்ச விஷயங்கள கூட பண்ண முடியும். அதுக்கு கட்டாயம் நம்முடைய ஆரோக்கியத்துக்கான நேரத்தை நாம ஒதுக்கியே ஆகணும்.
ஆமாங்க தினமும் ஒரு 20 நிமிஷம் ஆச்சு நாம இந்த யோகா பண்ணனும். இந்த யோகா பண்றதால என்ன நன்மைகள் இருக்கு அப்படின்னு பார்ப்போமா?
*மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
*மன அழுத்தத்தை குறைக்கிறது
*இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
*நுரையீரல் திறனை மேம்படுத்துகிறது
*பதட்டத்தை போக்குகிறது
*நாள்பட்ட முதுகுவலியைப் போக்குகிறது
*நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை குறைக்கிறது
*சமநிலை உணர்வை மேம்படுத்துகிறது
*வலுவான எலும்புகள்
*ஆரோக்கியமான எடை
*இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது
*ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது
இதுக்கு மேலயும் நிறைய நன்மைகள் இருக்கு அதனால தினமும் யோகா பண்ணுங்க. மனதையும் உடலையும் ஆரோக்கியமா வச்சிருங்க.