‘குணச்சித்திர ‘ நடிகர் மாரிமுத்து இன்று மரணம் அடைந்தார். தான் நடித்த ‘எதிர்நீச்சல்’ டி.வி சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால் இந்த மரணம் நேர்ந்தது என்று கூறப்பட்டுள்ளது.
சீரியல் என்றாலே அது பெண்களுக்கானது , பெண்களை மையமாக வைத்தே கதைகள் உருவாக்கப்படும், பெண்களின் கதாபாத்திரங்களே இங்கு பெருமளவு பேசப்படும் என்பதெல்லாம் தமிழ் தொலைக்காட்சிகளின் எழுதப்படாத விதியாகவே இருந்து வந்தது.
இப்படியிருக்க சமீப காலமாக ஒரு ஆண் கதாபாத்திரம் அனைவராலும் வெகுவாக கவனிக்கப்பட்டு வந்தது. சீரியல் பார்ப்பர்வர்கள் மட்டுமல்லாமல் Social Media-க்களிலும் இவர் பேசும் வசனங்களும், காட்சிகளும் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. Memes-க்கும், Reels-க்கும் இந்த Character நிறைய Content-களை கொடுத்தது. வீட்டில் இருக்கும் பெண் ரசிகர்களுக்குக்காக உருவாக்கப்படும் மெகா சீரியல்களில் வீடுகளை தாண்டி ஒரு கதாபாத்திரம் அனைத்து தரப்பிலும் சென்று சேர்ந்தது.
அந்த Character தான் சன் டிவி ’எதிர்நீச்சல்’ மெகா தொடரில் வரும் ஆதி குணசேகரன். எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து ஏற்று நடித்துக் கொண்டிருந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம் ஒன்றும் புதுமையான கதாபாத்திரம் கிடையாது. சாதாரணமாக அன்றாடம் வாழ்வில் நாம் பார்க்கும் ஆதிக்க குணம் கொண்ட ஒரு கரடுமுரடான குடும்ப தலைவன் கதாபாத்திரம் தான்.
தான் வைத்தது தான் சட்டம், தன் பேச்சை தான் அனைவரும் கேட்க வேண்டும், தன்னை எதிர்த்து யாரும் பேசக்கூடாது, தான் தான் இங்கு பெரியவன் என்ற மனோபாவம் கொண்ட Character. பல ஆண்டுகளாக ஆண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புகளை அப்படியே கடைபிடிக்கும் அக்மார்க் முரட்டு சிடு மூஞ்சி Character.
யார் பேச்சையும் கேட்காமல் தான் சொல்வதை தான் எல்லோரும் கேட்க வேண்டும் என்று தன் குடும்பத்தில் இருப்பவர்களையே Torcher செய்யும் கதாபாத்திரத்தை பார்த்தால் அனைவருக்கும் வெறுப்பு தான் வர வேண்டும். ஆனால் எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் Character வெறுப்பையும் தாண்டி அனைவரையும் ரசிக்க வைத்தது. அதற்கு அவரின் வசனங்கள், சீரியலின் திரைக்கதை சூழல் என நிறைய காரணங்கள் இருந்தாலும் நடிகர் மாரிமுத்துவின் நடிப்பே ஆதி குணசேகரன் பட்டிதொட்டி எங்கும் சென்றடைய காரணம்.
அவரை பார்க்கும் போதெல்லாம் அச்சு அசல் ஒரு Rugged குடும்ப தலைவனுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒருவரின் முகம் போலவே இருக்கும். மேலும் அவரின் Dialogue Delivery, அடிக்கடி கொடுக்கும் Thug Life Counter-கள், தன்னுடைய ஆளுமைக்கு பங்கம் வரும்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு தவிப்பில் செய்யும் Comical வில்லத்தனம் என அந்த கதாபாத்திரத்தை உயிர்ப்போடு தாங்கி இருப்பார் நடிகர் மாரிமுத்து.
இவரின் Thug Counters மற்றும் இந்தாமா, ஏமா போன்ற அன்றாட வாழ்வில் நாம் கடந்து போகும் சாதாரண வசனங்களை தனித்துவமான Body Language உடன் பேசுவது போன்றவைகள் Meme Content ஆகவும், Reels அகவும் Social Media-க்களில் பெருமளவு வைரல் ஆவதால் இந்த தலைமுறை 2k Kids-களும் ஆதி குணசேகரன் Character-ஐ ரசிக்கின்றனர்.
நடிகர் மாரிமுத்து தனது ஆரம்ப காலங்களில் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து அவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். பிறகு டைரக்டர் வசந்திடம் சில படங்கள் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு பிறகு இயக்குனராகி ‘கண்ணும் கண்ணும்’, ‘ புலிவால்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கினார். அதன் பிறகு நடிக்க ஆரம்பித்து பிசியான குணசித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். பரியேறும் பெருமாள் படத்தில் சிறப்பாக நடித்து பிரபலமடைந்தார். குறிப்பாக கடந்த வருடத்தில் எதிர்நீச்சல் தொடரில் பிரபலமாகி அனைத்து தமிழ் குடும்பங்களிலும் ஒருவராக மாறிப்போனார் மாரிமுத்து.
சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் கூட அவர் திரையில் தோன்றும் போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மாரிமுத்துவின் இழப்பு அவர் குடும்பத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. நம் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல பலரும் சமூகவலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சீரியல் வரலாற்றில் சித்தி சாராதா, மெட்டிஒலி போஸ், சின்னப்பாப்பா பெரிய பாப்பா பட்டாபி வரிசையில் எதிர்நீச்சல் ஆதி குணசேகரனும் நிலைத்திருப்பார்.