குணச்சித்திர நடிகர் இளவரசு சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ பட வெளியீட்டை முன்னிட்டு சூரியன் FM நேர்காணலில் பங்கேற்றார்.
அப்போது அவரிடம் 270 படங்களுக்கு மேல் நீங்கள் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளீர்கள், உங்களின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நன்றாக நடித்திருப்பீர்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நீங்கள் எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள்.
இயக்குநர் சொல்லி கொடுப்பதாலா அல்லது நீங்கள் உங்களின் திறமையை வளர்த்து கொள்ள தனியாக முயற்சி செய்கிறீர்களா? என்று கேள்வியெழுப்பினோம். அதற்கு பதிலளித்த அவர் “270 கதாபாத்திரமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதில் 100 கதாபாத்திரம் ஏற்கனவே பழகியது போல இருக்கும். அதனால் எனக்கும் நடிப்பதற்கு எளியதாக இருக்கும். இப்போது உதாரணமாக சுவை என்றால் ஆறு வகை அதே போல் தான் நடிப்பில் நவரசம். நவரசத்திற்குள் தான் மாறி மாறி நடிக்க வேண்டும்.
- ரயிலில் செந்தமிழில் முருகன் பாடலை பாடி அசத்திய சிறுவன்!
- இதற்கு மட்டும் அனுமதி கிடைத்துவிட்டால் தமிழ்நாட்டு இளைஞர்களை உலகமே திரும்பி பார்க்கும்!
- இந்த தப்ப உடல் எடை குறைக்க பண்ணாதீங்க!
- அறிவியலின் அடுத்த கட்ட வளர்ச்சி – உடலுறவு இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்!
- அவதார் படத்தை பார்த்து பயப்படும் உலக சினிமா!
சில படங்களில் இயக்குனர்கள் கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுவார்கள், சில படங்களில் நான் அந்த பொறுப்பை எடுத்துக் கொள்வேன். நான் அழும் போதும் சிரிக்கும் போதும் நிஜத்தில் எப்படி இருக்குமோ அப்படியே தான் நடிக்கும் போதும் இருக்கும். அது என்னுடைய Brand. முழுவதுமாக அதனை மாற்றி நடிக்க வேண்டுமென்றால் வேறு ஒரு கதாபாத்திரமாக மாற வேண்டும். இல்லையென்றால் இயக்குநருடனான freequency ஒத்துப் போக வேண்டும். இதனால் எல்லா படங்களிலும் மாறுபட்ட கதாபாத்திரங்கள் செய்து விட்டேன் என்று பொய் சொல்லி விட முடியாது.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கதையை மீறி வெளியே சென்று பார்ப்பவர்களுக்கு இடையூறு உண்டாக்காத வகையில் இருக்க வேண்டும். எனக்கும் பழகிக் கொண்டு பார்வையாளர்களுக்கும் புளித்துப் போகாத வகையில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய Moral of acting” என்று கூறினார். மேலும் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தது குறித்த அவரது அனுபவங்களை சுவாரஸ்யத்துடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள்: