Interview Stories

இமான் எடுத்த Interesting T-20 Challenge

இந்த கட்டுரையானது  ஹரிணி மற்றும் இசையமைப்பாளர் இமான் இவர்களின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது.

ஒரு சில நடிகர்கள் உங்களுக்கு ஆசிரியராக இருந்தால், அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்வீர்கள்?

ரஜினிகாந்த் – Style

கமல் – நடிப்பு

தளபதி விஜய் – நடனம்

தல அஜித் –  குணநலன் (Personality)

ஏ.ஆர். ரஹ்மான் – இசை

சிவகார்த்திகேயன் – அவர் கிட்ட கத்துக்க வேண்டியது Planning. அவர் தன்னை எப்படி வெளிக்காட்டிக்கொள்வது என்பதில் கவனமாக இருப்பார்.

ஒரு பாடல் நீங்கள் எதிர்பாராமல் ஹிட் ஆகியிருக்கிறதா?

அப்படி எந்த பாடலையும் சொல்ல முடியாது. ஹிட் ஆகாத பாடலும் ஹிட் ஆகா வேண்டும் என்ற எண்ணத்துடன் அமைக்கப்பட்டது தான்.

இமான்

எந்த கோலிவுட் பிரபலங்கள் உங்களுக்கு Classmates-ஆக இருக்க வேண்டும் என்று நினைக்குறிங்க?

இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான், இசைஞானி இளையராஜா, மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

நான் பொறுப்பானவன்

உங்களுடைய கல்லூரி பருவத்தில் உங்களுக்கு பிடித்த இடம் எது?

எனக்கு பிடித்தது வகுப்பறை தான். வகுப்பை புறக்கணிக்கும் பழக்கமே எனக்கு கிடையாது. இசையில் ஆர்வம் இருந்தபோதும் வகுப்பை புறக்கணிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

நான் சினிமாவில் இசையமைப்பது நிறைய பேருக்கு பிடிக்காது. என்னுடைய விருப்பத்துக்காக இதை நான் செய்கிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டியது என் கடமை.

‘ஏன் பா இப்படி பண்ற’-னு சிவகார்த்திகேயனை பார்த்து எதற்காக கேட்க ஆசைப்படுகிறீர்கள்?

அவருடைய நடனத்தை பார்த்து அப்படி கேட்க ஆசைப்படுகிறேன். நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குமுறுத்தப்பறு பாடலில் அவர் ஆடிய நடனத்தை நான் பார்த்து வியந்தேன்.

நடிகர் சூரியின் ட்விட்டர் பக்கத்தை நீங்கள் உபயோகித்தால், அதில் என்ன பதிவிடுவீர்கள்?

‘இனிமே நான் நகைச்சுவை நடிகராக நடிக்க மாட்டேன், கதாநாயகனாக தான் நடிப்பேன்.’,என்று பதிவிடுவேன்.

இந்த கதாபாத்திரங்களை நீங்கள் சந்தித்தால் அவர்களிடம் என்ன கேட்பீர்கள்?

பாட்ஷா – எவ்வளவு வயசு ஆனாலும் உங்கள் Style-உம் அழகும் உங்களை விட்டு போகவே இல்லையே, அது எப்படி?

துப்பாக்கி ஜெகதீஷ்– துப்பாக்கி படத்திற்கு பிறகு உங்களது உடை மற்றும் பாவனைகள் மிகவும் மாறுபட்டு இருக்கிறது, அது ஏன்?

மங்காத்தா விநாயக் மஹாதேவ் – நீங்கள் எப்படி இருந்தாலும் அதை ரசிக்கிறார்களே, அது எப்படி?

வேலுநாயக்கர் (கமல்) – இதனை பரிமாணங்களை எப்படி கொண்டு வருகிறீர்கள்?

இமான்

உங்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் உண்டான புரிதலை பற்றி கூறுங்கள்?

அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தை நான் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் வரிகளை என்னிடம் கொடுத்ததற்கு பிறகு அதில் எந்த மாற்றமும் நான் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கமாட்டேன்.

நீங்கள் பெண்ணாக பிறந்திருந்தால் உங்கள் கோலிவுட் Crush யாராக இருந்திருப்பார்?

அஜித் சார் தான்.

நீங்கள் எந்த நடிகரோடு இணைந்து வேலை செய்ய விரும்புகிறீர்கள்?

அப்படி எந்த நடிகரும் இல்லை. நான் பெரும்பாலும் இயக்குனர்களுடன் தான் வேலை செய்யுவேன், நடிகர்களுடன் அதிக நேரம் இருக்க மாட்டேன்.

உங்கள் Purse-ல் இருக்கும் அதிசயமான விஷயங்கள் என்னென்ன?

கடவுளின் புகைப்படமும், என் மனைவியின் புகைப்படமும் தான்.

முழு Interview-யை கீழே கண்டு மகிழுங்கள்.