Interview Stories

பட்டாஸ் குழுவினர் Exclusive Interview

இந்த கட்டுரையானது தமிழன்டா ரமேஷ் மற்றும் பட்டாஸ் பட குழுவினரின் நேர்காணலின் தொகுப்பு. இந்த நேர்காணலில் பட்டாஸ் திரைப்படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார், இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

உங்க படங்கள் அனைத்திலும் ஒரு Research இருக்கும் , அவ்வகையில் பட்டாஸ் படத்திற்கு பின்னால் இருக்கும் Research என்ன?

துரை செந்தில்குமார்: பொல்லாதவன் படம் shooting அப்போவே கிக் Boxing சம்மந்தமா ஒரு கதை பண்ணனும்னு வெற்றி மாறன் சொன்னாரு. ஆனால் அதற்கு பிறகு ஆடுகளம் படம் தான் பண்ணினோம்.

தனுஷ் வெற்றிமாறனோட One Liner -அ டெவெலப் பண்ணி ஒரு படம் பண்ணலாம்-னு என்கிட்ட சொன்னாரு. ஆனா என் ஸ்டைல்-ல யோசிக்கிறப்போ அது Artificial-ஆ இருந்தது. அப்போ தான் தமிழர் மரபுக்கலை வைத்து ஒரு படம் பண்ணலாம்-னு தோணுச்சு.

தனுஷ் எனக்கு தேவையான சுதந்திரத்தை கொடுத்தாரு. ஒரு எட்டு மாசம் Research பண்ணி இந்த Script-அ develop பண்ணேன். அது தான் பட்டாஸ்.

புதுப்பேட்டை படத்துல இருக்குற கொக்கி குமார்- கிருஷ்ணவேணி கதாபாத்திரங்கள் திரும்ப வராங்கனு எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருக்காங்க ,அவங்கள பத்தி சொல்லுங்க?

துரை செந்தில்குமார் : அந்த கதாபாத்திரங்களுக்கு இவ்ளோ எதிர்பார்ப்பு இருக்கும்னு எனக்கு இப்போ தான் தெரியும். தனுஷும் சினேகாவும் அவர்களுடைய கதாபாத்திரங்களை நன்றாக நடித்திருக்கிறார்கள்.

சினேகா மேடம்-க்கு மிகவும் Strong-ஆன கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த காலத்தில் மெல்லிசை மன்னர்கள் என இருவரை கூறுவார்கள். அதுபோல இன்றைய காலத்தில் விவேக் – மெர்வின் கூட்டணி எல்லோரும் விரும்பும் கூட்டணியாக அமைந்துள்ளது, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விவேக் – மெர்வின்: நாங்கள் வேலை செய்துகொண்டு இருக்கும் போது, அப்பப்போ எங்களுக்காக ரசிகர்கள் செய்த Meme-களை பாப்போம். அதுவே எங்களுக்கு ஒரு புத்துணர்வை கொடுக்கும்.

‘ஓரசாத பாடலை’ உங்களுடைய நண்பர்களே WhatsApp ஸ்டேட்டஸ்- வைக்கும்போது எப்படி Feel பண்ணீங்க ?

விவேக் – மெர்வின்: அது ஒரு Independent பாடல். வெளியான சில நாட்களில் அதை அனைவரும் டிக் டாக் செய்தார்கள், அப்படியே அந்த பாடலும் வைரலானது.

முழு Interview-ஐ கீழே கண்டு மகிழுங்கள்…