Cinema News Interview Stories

ரஹ்மான் இல்லை என்றால் நாங்கள் இல்லை! – பிரதீப் குமார்

Pradeep-kumar

சமீபத்தில் பாடகர் பிரதீப் குமார் சூரியன் FM நேர்காணலில் பங்குபெற்றார். அப்போது நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் நிறைய பாடல்களை கிட்டாரில் இசையமைத்துக் கொண்டே பாடியும் காண்பித்தார்.

குதிரைவால் படத்திலிருந்து பறந்து போகின்றேன், போகும் வழிகள், மற்றும் தாலாட்டு, மேயாத மான் படத்திலிருந்து மேகமோ அவள், காதலன் படத்திலிருந்து என்னவளே அடி என்னவளே, மே மாதம் படத்திலிருந்து என்மேல் விழுந்த, ஜெய் பீம் படத்திலிருந்து தல கோதும் இளங்காத்து ஆகிய பாடல்களை நமக்கு பாடிக் காட்டினார்.

மேலும் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேச ஆரம்பித்த அவர், “எனக்கு சினிமா மீது இருக்கும் காதலால் தான் நான் இப்போது சினிமாவில் இருக்கிறேன். Voice is also an instrument, And every instrument is a voice. சந்தோஷ் நாராயணன் உடன் நான் பாடிய பல பாடல்கள் எங்களுக்கு திருப்திகரமாக இருக்காது. ஆசை ஒரு புல்வெளி பாடலை கிட்டத்தட்ட 15 முறை பாடினேன். சந்தோஷ் எந்த டேக்கை உபயோகித்தார் என்பது எனக்கு தெரியாது.

ரஹ்மான் சாரின் அனைத்து பாடல்களுக்கும் நான் மிகப்பெரிய ரசிகன். அவர் இல்லையென்றால் நாங்களெல்லாம் இப்பொழுது இசையமைப்பாளர்களாக ஆகியிருக்க முடியாது. ரஹ்மான் உருவாக்கி வைத்த ட்ரெண்டில் தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள்!

Article By MaNo