பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் திரைப்படம் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பலரின் Playlist-ல் இடம் பிடித்து விட்டது . இந்நிலையில் இப்படத்தின் “ஜெய் சுல்தான்” பாடலின் வீடியோ தற்போது Youtube-ல் வெளியாகியுள்ளது.
விவேக்-மெர்வின் இசையில் உருவாகியுள்ள இப்பாடல், வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் பாடலாக அமைந்தது. இப்பாடலை விரைவில் திரையில் காண வேண்டும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, இப்பாடலின் Official வீடியோ வெளியாகி இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்பாடலை Rockstar அனிருத், ஜூனியர் நித்யா மற்றும் கானா குணா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இப்பாடலில் வரும் வேற Level வரிகளை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். ஒரு Commercial படத்தில் தோன்றும் Hero Entry பாடலுக்கு ஏற்ற பத்து பொருத்தமும் பக்காவாக இப்பாடலில் அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம். இப்பாடலின் வீடியோவில் கார்த்தியின் சுறுசுறுப்பான நடனம் இப்பாடலை காண்போரையும் துள்ளாட்டம் போட வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
சுல்தான் திரைப்படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் என அனைத்துமே இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து கார்த்தியை திரையில் காண அவரது ரசிகர்கள் திரை மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.
சுல்தான் திரைப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். “ஜெய் சுல்தான்” பாடலின் வீடியோவை கீழே காணுங்கள்.