Specials Stories

கண்ணால் பேசும் கிளியே !!! – Happy Birthday Jyotika

ஒரு மொழியை கத்துக்குறதுன்றது வெறும் வார்த்தைகளையும் இலக்கணத்தையும் புரிஞ்சிக்கிறது மட்டும் இல்லை. அந்த நிலத்தோட உணர்வுகளையும், வரலாற்றையும், வாழ்க்கையையும் சேர்த்து புரிஞ்சிக்கிறது. அப்படி, ஒரு மொழிய தாய்மொழியா கொண்டவங்கள்ல பல பேரு தமிழ் மொழியை கத்துக்கிட்டு, தமிழகத்துல சிறப்பா பணியாற்றி இருக்காங்க. ஜி.யு.போப்ல தொடங்கி இன்னைக்கு ஹர்பஜன் சிங் வரைக்கும் பல துறைகள்ல இருந்து இது மாதிரி தமிழ் நாட்டுக்குள்ள அடி எடுத்து வைச்சவங்க பலர்.

திரையுலகத்துல இப்படி பலர் இருக்காங்க, 90ஸ் கிட்ஸ்க்கு ரொம்ப பிடிச்ச நடிகை ஜோதிகாவும் இந்த விதத்துல தமிழ் கத்துக்கிட்டு, தமிழ் பொண்ணாவே திகழ்றவங்க தான். தடைகள் எல்லாம் தாண்டி, பல கோடி மக்கள் மனசுல இடம் பிடிக்கிறதுன்றது சாதாரண விஷயம் இல்ல, சாதனை.

ஜோதிகா நடிச்ச படம், பாட்டுனாலே பொதுவாவே சூப்பர் ஹிட் ஆகும். அவங்க முதல்ல நடிச்ச படம் 1999ல வெளியான ‘வாலி’, சில காட்சிகள்ல வந்தாலும், யார் இந்த பொண்ணுன்னு தமிழ் ரசிகர்களை யோச்சிக்க வைச்ச ஒரு படம் அது. அதுக்கு பிறகு ‘குஷி’-ன்னு ஒரு படம், இந்த படத்து பேர சொன்ன உடனேயே வேகமா ஓடி வர்ற கால்கள் பாறையில இருந்து தண்ணீர்க்குள்ள குதிக்கிற காட்சி, அதுக்கு பிறகு நம்ம மனசு இன்னக்கும் குளிர்றது மாதிரி ‘மேகம் கருக்குது’ பாட்டுன்னு இப்போ வரைக்கும் ஜோதிகாவோட அந்த துள்ளல் நடனப்பாடல், எல்லாரையும் ஆட்டம் போட வைக்கும். இந்த படத்துக்காக சிறந்த நடிகை விருதும் அவங்களுக்கு கிடைச்சது.

இந்த படத்துக்கு பிறகு பல படங்கள்ல நடிச்ச ஜோதிகாவுக்கு திருப்புமுனை படம்னா, அது 2005ல வெளியான ‘சந்திரமுகி’. இந்த படத்துக்கும் அவங்களுக்கு விருது கிடைச்சது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம், ஆனா ஜோதிகாவுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம். எல்லாரும் பாராட்டுற அளவுக்கு அவங்க திரையை நிறைச்சி இருந்தாங்க. பூவெல்லாம் உன் வாசம், சினேகிதியே, காக்க காக்க, பேரழகன், வேட்டையாடு விளையாடு, பிரியமான தோழி, சில்லுனு ஒரு காதல், போன்ற பல படங்கள்ல பல விதமான கதாப்பாத்திரங்களை எடுத்து நடிச்சதுனால கிடைச்ச பரிசுகள் இன்னும் பல வித்தியாசமான சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்கள்.

‘மொழி’ – இந்த படம் ஜோதிகாவோட வாழ்க்கையில மாற்றுக் கருத்தே இல்லாத அளவுக்கு ஒரு சிறந்த படம்னு சொல்லலாம். இந்த படத்துக்காக அவங்க sign language-அ முறையா, முழுசா கத்துக்கிட்டாங்க. இவங்க திரைப்படங்கள் எவ்வளவு மென்மையா இருக்கோ அதே போல இவங்களோட நிஜக் காதல் கதையும் மென்மையானது. தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிச்சது. தமிழ்நாட்டுக்கு வந்த ஜோதிகா முதல் முதல்ல பார்த்தது நடிகர் சூர்யாவை தான். அவரையே காதலிச்சு, 2006ல திருமணம் செஞ்சிக்கிட்டாங்க. இப்போ சூர்யா, ஜோதிகாவுக்கு இரண்டு குழந்தைகள். இந்த பெயர்களை சேர்த்து தான் அவங்களோட திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு 2D Entertainment-னு பெயர் வச்சிருக்காங்க.

திருமணத்துக்கு பிறகு திரைப்படங்கள்ல நடிக்காம இருந்த ஜோதிகா, ’36 வயதினிலே’ படத்துல திரும்ப வந்துட்டேன்னு சொல்லுன்னு ஒரு Comeback கொடுத்தாங்க. பெண்களால சாதிக்க முடியாதது எதுவும் இல்லன்னு சொல்ற திரைப்படங்கள் வரிசையில இந்த படம் ஒரு சிறந்த இடம் பிடிச்சது. “Who decides the expiry date of the women’s dream” இந்த வசனம் தாங்க அந்த படத்தோட மையக் கருவே. இந்த படம் மட்டும் இல்ல அதுக்கு பிறகு அவங்க நடித்த படம் எல்லாமே பெண்கள் வளர்ச்சி, உரிமைனு ஒரு “Bold”-ஆன கதையை, கருத்தை, கதாபாத்திரத்தை கொடுத்த படங்களா தேர்வு செஞ்சாங்க.

இதுக்கு நடுவுல ஆண்கள் மட்டும் தான் முழுநீள காமடி படங்கள்ல நடிக்க முடியுமா, பெண்களும் அப்படி ஒரு முயற்சி பண்ணலாம்னு ஜோதிகா, நடிகை ரேவதி கூட கைக்கோர்த்த படம் ‘ஜாக்பாட்’. படம் முழுக்க சிரிப்பு தான். 2019-ல வெளியான படம் தான் ‘ராட்சசி’. இந்த படத்துல நேர்மையும், விடாமுயற்சியும் கொண்ட ஒரு ராணுவ வீராங்கணை எப்படி ஒரு உறவுக்காக, நாட்டுக்காக, மக்களுக்காக மாற்றங்களை ஏற்று, மாற்றங்களை கொண்டு வர்றாங்கனு நேர்த்தியா நடிச்சி காட்டி இருப்பாங்க. இந்த படத்துல வெறும் 10 நொடிகள் வர சிலம்பம் சுற்றும் காட்சிக்காக 6 மாதம் பயிற்சி எடுத்து இருந்தாங்கலாம் ஜோதிகா.

திரைப்படங்கள் பத்தி, interviews எடுக்கும் போது கண்டிப்பா ஜோதிகா, அவங்க கணவர் சூர்யா பத்தி சொல்லுவாங்க. குடும்பத்த பத்தி பேசுவாங்க. அது எதார்த்தமான அன்பு. அதே அன்பை அவங்க ரசிகர்களும் அவங்களுக்கு கொடுத்துக்கிட்டே இருக்காங்க. அதுக்கு உதாரணம் Instagram-ல ஜோதிகா ஒரு account open பண்ணின 35 நிமிஷத்துலயே 1.5 million followers அவங்கள follow பண்ண தொடங்கினாங்க.

தமிழ் திரையுலகத்துல இமயம் தொட்ட பலரில் தமிழ் ரசிகர்களின் இதயம் தொட்ட நடிகை ஜோதிகா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்கிறது சூரியன் FM.

  • Article by RJ Suba Vellore

About the author

alex lew