Cinema News Stories

“க”-வால் உருவான காமி காமி பாடல் !!!

துக்ளக் தர்பார் திரைப்படத்தின் காமி காமி பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை வைத்து இயக்கியுள்ள புதிய திரைப்படம் துக்ளக் தர்பார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து முதன் முதலில் வெளியான அண்ணாத்த சேதி பலரின் Playlist-ல் தினமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Tughlaq Durbar (2021) - IMDb

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் அணைத்து பாடல்களும் Juke Box-ஆக இணையத்தில் வெளியானது. இன்று காமி காமி பாடலின் முழு வீடியோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்பாடலின் மொத்த வரிகளும் “க” எழுத்து வரிசையிலேயே எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். பாடல் வெளியான சில நிமிடங்களில் இருந்தே மதன் கார்க்கிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் வந்து குவிந்தது.

ஏற்கனவே கோவிந் வசந்தா இசையில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 96 திரைப்படத்தின் பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்த சுவாரஸ்யமான சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. துக்ளக் தர்பார் திரைப்படத்தின் பாடல்களும் அதே அளவு அங்கீகாரத்தைப் பெறும் என எதிர்பார்க்கலாம்.

துக்ளக் தர்பார் திரைப்படத்தின் அறிவிப்புகள் வரும்போதெல்லாம் இப்படத்தை விரைவில் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

இப்பாடலின் வீடியோவை கீழே காணுங்கள்.

About the author

alex lew