கங்குவா திரைப்படத்தின் Fan Made போஸ்டர்கள் சில சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் கங்குவா திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.
பாலிவுட் கதாநாயகி திஷா பதானி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தமிழில் இவரது அறிமுகப் படம் இது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
கங்குவா திரைப்படத்தின் Title Announcement வீடியோ ஏற்கனவே வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ள நிலையில், தற்போது படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என ரசிகர் ஒருவர் சில போஸ்டர்களை உருவாக்கி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இது தற்போது பலராலும் பகிரப்பட்டு சமூகவலைதளங்களில் பெருமளவில் வைரலாகியுள்ளது.