செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்து வெளிவந்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தின் ‘கண்ணுங்களா செல்லங்களா’ வீடியோ பாடல் Youtube-ல் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அமைந்த இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘கண்ணுங்களா’ வீடியோ பாடல் வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் Youtube-ன் டிரெண்டிங் பட்டியலில் இப்பாடல் 2-ஆம் இடத்தை பிடித்துவிட்டது. பொதுவாக யுவனின் குரலில் ஒலிக்கும் பாடல்கள் அனைத்தும் கேட்போரின் காதில் தேன் வந்து பாயும் கானமாக அமையும். அந்த வகையில் ‘கண்ணுங்களா’ பாடலும் யுவனின் குரலில் அமைந்த ஒரு மெலடி கலந்த Peppy number-ஆக ரசிகர்களின் Playlist-ல் வலம் வருகிறது.
இப்பாடலுக்கு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தின் இயக்குனரான செல்வராகவனே வரிகளை எழுதியுள்ளார். இப்பாடலின் சரணத்தில் கண்ணதாசனின் ‘செல்லக் கிளிகளாம் பள்ளியிலே’ பாடலின் சில வரிகள் இடம்பெற்றிருக்கும். இந்த வரிகளை யுவனின் குரலில் பாடலாய் கேட்கும்போது நம் மனதில் ‘இனிமை ஊஞ்சலாடுகிறது’ என்றே சொல்லலாம்.
‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தின் கதை நகர்வுக்கேற்ப இப்பாடல் அமைந்துள்ளதால் படம் பார்ப்போருக்கு இப்பாடல் எந்த வித சலிப்பையும் ஏற்படுத்தாமல் ‘கதையோடு கானமோடும் (கானம் + ஓடும்)’ பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலின் வீடியோவில் எஸ்.ஜே.சூர்யாவின் தத்ரூபமான நடிப்பும், Suspense நிறைந்த முகபாவனைகளும் படம் பார்காதவர்களுக்கும் இப்படத்தை காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.
‘கண்ணுங்களா செல்வங்களா’ பாடலின் வீடியோவை கீழே காணுங்கள்.