மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அவர்களுக்கும் தனது கனிவான நன்றியை தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் வெளியான சில நிமிடங்களிலேயே தனுஷ் ரசிகர்கள் பெரிதளவில் இச்செய்தியை பகிர்ந்து வருகின்றனர். தனுஷின் பதிவை கீழே காணுங்கள்.
மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால், கர்ணன் திரைப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனே கர்ணன் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். தனுஷ் நடிக்கும் மற்றொரு படமான ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கும் சந்தோஷ் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு Still-கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. அந்த புகைப்படங்களே இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை பெரிதளவில் ஏற்படுத்திய நிலையில், தனுஷின் படப்பிடிப்பு நிறைவை தெரிவிக்கும் ட்வீட் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கர்ணன் திரைப்படத்தில் ராஜிஷா விஜயன், யோகி பாபு, கவுரி கிஷன், லால் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் தனுஷ் ரசிகர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாய் அமையும் என தெரிகிறது. கர்ணன் திரைப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.