சில பாடல்கள நாம ரொம்ப ரசிச்சு திரும்ப திரும்ப கேப்போம். அதுக்கு காரணம் ஒன்னு அந்த பாடலோட இசையா இருக்கும் இல்ல வரிகளா இருக்கும். ஆனா பலரும் திரும்ப திரும்ப ஒரு பாடலை கேட்க அதிகப்படியான காரணம் அந்த பாடலோட வரிகளா தான் இருக்கும்.
அப்படி நாம ரசிச்சு கேட்டு… மீண்டும் மீண்டும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல போட்டு கொண்டாடின ஏகப்பட்ட பாடல்களுக்கு சொந்தக்காரர் கவிஞர் சினேகன். தனியார் தொலைக்காட்சில ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அப்பறம் தான் பலருக்கும் சினேகன் அறிமுகம், ஆனா அதுக்கு முன்னாடியே தன்னோட எழுத்துக்களால தமிழ் சினிமால தனக்கான தடத்த பதிச்சிருந்தாரு சினேகன்.
ஆரம்ப காலத்துல கவிஞர் வைரமுத்துவோட தமிழ் சினிமால 5 வருஷம் பயணிச்சாரு. அப்பறம் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் ஒரு நிகழ்ச்சில நீ நல்லா கவிதை எழுதுற சினிமாலயும் உன்னோட வரிகள் இடம்பெறனும்னு செல்லிருந்தாரு. அந்த வார்த்தைகள் கவிஞர் சினேகனுக்கு இசையமைப்பாளர் S.A.ராஜ்குமார் இசைல புத்தம் புதிய பூவே படத்துல பாடல் எழுத வாய்ப்பை கொடுத்துச்சு. அதுமட்டுமில்ல சினேகன்னு தஞ்சைல பிறந்த தமிழ் கவிஞர் ஒருத்தர் இருந்தாருனு வரலாற்றுல இடம் பிடிக்க 2500க்கும் அதிகமான பாடல்களையும் இதுவரை தந்திருக்கு.
ஆண்கள் தன்னோட காதலிய வர்ணிக்க பல பாடல்கள் தமிழ் சினிமால இருக்கு, ஆனா பெண்கள் தன்னோட காதலன வர்ணிக்க என்ன பாடல் இருக்குனு யாரும் கேட்டா? பல பெண்களோட முதல் பதில்
“மன்மதனே நீ கலைஞனா
மன்மதனே நீ கவிஞனா
மன்மதனே நீ காதலனா
மன்மதனே நீ காவலனா”
இது மட்டுமில்ல சூரரைப்போற்று படத்துல வந்த
“காட்டு பயலே கொஞ்சி போடா
என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல தூக்கி போக
வந்த பையடா நீ”
இந்த பாடல்கள எழுதினது கவிஞர் சினேகன் தான்.
ஒரு பெண் தன்னோட தோழன பத்தி பாட
“தோழா தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சுக்கனும்
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கனும்”
நம்ம தூங்க வைக்க தாலாட்டு பாடின அம்மாவுக்காக ஒரு தாலாட்டா
“ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு”
குடும்பங்களோட ஒன்னா இருக்க வாழ்க்கையை வர்ணிக்க
“அவரவர் வாழ்க்கையில்
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில்
திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்”
தவமாய் தவமிருந்து நம்மை பெற்ற வாழும் தெய்வங்களான அப்பா, அம்மாவுக்காக
“ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே
அது யாரு ஒங்க அப்பா “
எப்படி வேணாலும் வாழ்க்கைய வாழலாம்னு நினைக்குற பலருக்கு பதிலா
“ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?”
வாழ்க்கைல மறுபடியும் பள்ளிக்கு போகனும்னு நினைக்குற பலர பாடலால கூட்டிட்டு போக
“மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்”
காதலி காதலை ஏத்துக்கிட்டத கொண்டாட ஒரு குத்து பாட்டா
“ஒத்த சொல்லால ஏன் ஊரெடுத்து ஒட்டிக்கிட்டா”
காதலிய முதல் முறை பார்த்த சந்தோஷத்தை கொண்டாட
“யாத்தே யாத்தே”
அதுலயும்
“அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா”
இந்த வரிகளுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்காங்க.
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா…?, தீம்தனக்கு தில்லானா, அப்பாம்மா விளையாட்ட விளையாடி பாப்போமா , மாம்பழமா மாம்பழம்னு இளைஞர்களின் ரசனைகளுக்கேற்ற மாதிரியும் பல பாடல்களை தந்திருக்காரு சினேகன்.
இப்படி பல இசையமைப்பாளர்களோட இசைக்கு தன்னோட வரிகளால உயிர் தந்துள்ள சினேகன், ‘யோகி’ , ‘உயர்திரு 420’ போன்ற படங்கள்ல நடிக்கவும் செஞ்சிருக்காரு.
கவிஞர், நடிகர், பாடலாசிரியர் போன்ற பல அவதாரங்கள் கொண்ட சினேகன் தன்னோட பேனாவால இன்னும் எக்கச்சக்க பாடல்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தரணும்னு ஒரு ஆசையோட, சூரியன் FM-ன் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Add Comment