டிவி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கவின். மேலும் அவரது வசீகரமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
சீரியல்களை தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த கவினுக்கு ஆரம்பத்தில் சில திரைப்படங்கள் கைகொடுக்கா விட்டாலும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் அவர் நடித்த ‘DA DA ‘ திரைப்படம் சூப்பர்ஹிட் திரைப்படமாக அமைந்தது . மேலும் இந்த படம் தந்தை மற்றும் மகன் உணர்வை மையமாகக் கொண்ட ஒரு ஜோடியின் கதை என்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனால் அவரது ரசிகர்கள் அதிகமானதோடு தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் கவனிக்கதக்கவராகவும் மாறிவிட்டார். இந்நிலையில் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. அவரது நீண்ட நாள் தோழியான மோனிகா டேவிட்டை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
மேலும் இந்த ஜோடியின் திருமணம் இரு குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இவர்களது திருமண நிகழ்வில் பல சின்னத்திரை மற்றும் சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.