Specials Stories

கார்த்திக் சுப்புராஜ் என்கிற கோலிவுட் “ஹிட்டுராஜ்”

Karthik-Subbaraj

நம்ம வாழ்க்கைல எல்லாருமே எப்பவும் எதிர்காலத்த பத்தியே யோசிச்சிட்டு இருப்போம்.ஸ்கூல் படிக்கும்போது எப்ப காலேஜ் போவோம், காலேஜ் படிக்கும்போது எப்ப வேலைக்குபோவோம்னு இது தொடர்ந்துட்டே இருக்கும்.

அந்த மாதிரி கை நிறைய சம்பளத்தோட ஒரு இன்ஜினியரா வேலை செஞ்சிட்டு இருந்த கார்த்திக் சுப்புராஜோட எதிர்கால கனவு நல்ல சம்பாதிக்கனும் அடுத்து சொந்தமா கார் வாங்கனும், வீடு வாங்கனும் , நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணணும் அப்படியே Life-ல Settle ஆகிடனும், இந்த மாதிரி ஒரு சராசரி மனுஷனோட கனவா இல்லாம, தன்னோட கனவுல இருந்த கதைய படமாக்கனும், அந்த படத்தோட வெற்றி தயாரிப்பு நிறுவனத்துக்கு பணமாகனும், கோலிவுட் சினிமால தனக்கான பெயர் உருவாகனும், வாய்ப்பு தேடி வரவங்களுக்கு வாய்ப்பு தரும் தயாரிப்பு நிறுவனமாகனும்னு இன்னைக்கு வர தொடர்ந்துட்டே இருக்கு.

காலேஜ் படிக்கும் போதே கார்த்திக் சுப்புராஜ் அங்க நடக்குற Culturals-ல Mime, Drama-க்குலாம் Script பண்ணியிருக்காரு. அந்த அனுபவம் தான் அவர நல்ல நல்ல கதைகள் எழுத உதவுச்சுனு கூட சொல்லலாம். இன்ஜினியரா வேலை செஞ்சிட்டு இருந்தப்ப “நாளைய இயக்குனர்” என்ற ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடந்துச்சு. இன்ஜினியரா கைநிறைய சம்பளம் வந்தாலும் மனசு நிறைய வேலை செய்ய முடியாம, வெளிநாட்டுக்கு போற வாய்ப்பு கிடைச்சும் அத வேண்டாம்னு சொல்லி, இருந்த வேலையையும் விட்டுட்டாரு.

அந்த தருணத்துல கார்த்திக் சுப்புராஜ் கைல இருந்தது அவரோட “காட்சிப் பிழை” குறும்பட கதை மட்டும் தான். கைல இருக்க கதை தான் தன்னோட வாழ்க்கைன்ற எண்ணத்தோட முழு நம்பிக்கையோட நாளைய இயக்குனர் மேடை ஏறினாரு. அந்த மேடைல வெற்றியோட நின்னாரு.

நீ “ஜெயிச்சுட்ட கார்த்தி, ஜெயிச்சுட்ட” இது அந்த ஒரு நாள் அவர சுத்தி சுத்தி வந்த குரல், ஆனா அடுத்த 2 வருஷத்துக்கு படம் இயக்க பல தயாரிப்பு நிறுவனம் ஏறி ஏறி இறங்கிட்டு இருந்தாரு. அந்த நேரத்துல தான் இனி நீ எங்கயும் ஏறி இறங்க வேண்டாம் ஏறிக்கிட்டே இரு உன் படைப்புகளோடனு தயாரிப்பாளர் C.V.குமார் “பீட்சா” படத்த இயக்க வாய்ப்பு கொடுத்தாரு.

அந்த படம் எல்லா வித ரசிகர்களையும் திருப்தி படுத்தின சூப்பர் ஹிட் படமா அமைஞ்சுது. பல மொழிகள்ல ரீமேக்கும் ஆச்சு. முதல் படம் ஹிட் கொடுத்தா போதும் அடுத்து தானா வாய்ப்பு கிடைக்கும்னு சொல்லிட்டு இருந்த கூட்டம் கார்த்திக் சுப்புராஜ்கிட்ட முதல் படம் ஹிட் தரது பெருசில்ல அடுத்தடுத்து ஹிட் தரனும்னு சொல்லுச்சு. கைநிறைய சம்பளம் கிடைச்ச வேலைய சினிமாக்காக விட்டுட்டு வந்த கார்த்திக் சுப்புராஜ் , அதே கைநிறைய கதை இல்லாமையா கோலிவுட்குள்ள வந்திருப்பாரு.

Jigarthanda (2014)

கார்த்திக் சுப்புராஜோட 2வது படம் “ஜிகர்தண்டா” இந்திய அளவுல எல்லாராலையும் கொண்டாடப்பட்ட blockbuster ஹிட்டாச்சு. அந்த படத்தல நடிச்ச “பாபி சிம்ஹா”க்கு தேசிய விருதும் வாங்கி தந்துச்சு. ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ்க்கு கோலிவுட் வட்டாரத்துல பல முன்னணி இயக்குனர்கள்கிட்ட, நம்ம சூப்பர் ஸ்டார்கிட்டனு பல பாராட்டுகள வாங்கி தந்துச்சு. அதோட கார்த்திக் மேல கோலிவுட் சினிமால புது நம்பிக்கையையும் உருவாக்குச்சு.

அடுத்து Stone Bench-னு Production Company ஆரம்பிச்சு பல புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு, இல்ல வாழ்க்கை கொடுத்தாரு கார்த்திக் சுப்புராஜ். அதுல தயாரான படங்கள் தான் மேயாத மான், பென்குயின், அவியல், கள்ளச் சிரிப்பு, ட்ரிபில்ஸ், பூமிகா. தொடர்ந்து இறைவி, மெர்குரினு படம் பண்ணிட்டு இருந்த கார்த்திக் சுப்புராஜ்க்கு அவரோட கனவு நாயகனான நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த இயக்க வாய்ப்பு கிடைச்சது. ஒரு FAN BOY சம்பவம்னா என்னானு “பேட்ட” படத்த பாத்தா நாம தெரிஞ்சுக்கலாம். 80, 90s kids சூப்பர் ஸ்டார எப்படி ரசிச்சோமோ அத 2k Kids-க்கும் பிடிக்குற மாதிரி பக்கவான blockbuster ஹிட் கொடுத்தாரு.

பேட்ட ஹிட்க்கு அப்பறம் , தனுஷ் நடிப்புல வந்த “ஜகமே தந்திரம்”, வெப் சீரிஸா புத்தம் புது காலை, நவரசா, கடைசியா விக்ரம் & துருவ்-அ வச்சு இயக்குன “மகான்” எல்லா படத்துக்குமே ரசிகர்கள் மத்தில சிறப்பான வரவேற்பு கிடைச்சுது. ஆனாலும் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களுக்கு ஒரு வருத்தம், இந்த படங்கள் தியேட்டர்ல ரீலிஸ் ஆகலையேனு. ஒவ்வொரு முன்னணி நடிகர்களோட ரசிகர்களுக்கும் கார்த்திக் சுப்புராஜ் கூட நம்ம Favourite Actor படம் பண்ணணும் அப்படின்ற ஆசை இருக்கும். ஏன்னா அந்த அளவு கார்த்திக் சுப்புராஜோட இயக்கம், திரைக்கதை எல்லாமே சிறப்பா இருக்கும்.

கார்த்திக் சுப்புராஜ் இன்னும் பல வெற்றிப் படங்கள் தந்து கோலிவுட் சினிமால கொடிகட்டிப் பறக்குறதோட இல்லாம அந்த கொடிக் கம்பம் போல வெற்றிகளோட நிலைச்சு நிற்க சூரியன் FM இன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By RJ SRINI.