“கண்ணு ராகவா…” அப்டின்ற dialogue-அ கேட்டாலே நம்ம கண்ணு முன்னாடி வரது கண் சிமிட்டுற கோவை சரளாவோட முகம் தான்… இவங்க அற்புதமான நகைச்சுவை நடிகை-ன்றதுக்கு சிறந்த சான்றுகளா சதிலீலாவதி, பூவெல்லாம் கேட்டுப்பார், கரகாட்டக்காரன் படங்கள சொல்லலாம்… நமக்கு மட்டும் இல்ல அவங்களுக்கும் இந்த படங்களோட roles தான் ரொம்ப favourite-ஆம்…
பிறந்தது மட்டும் தான் மலையாள குடும்பத்துல… ஆனா கொங்கு தமிழ்ல இருந்து சென்னை தமிழ் வரைக்கும் எல்லாத்தையும் சரளமா பின்னி பெடல் எடுப்பாங்க சரளா…. அதுக்கு சதிலீலாவதி படம் excellent-ஆன example… தமிழ் மட்டுமா மலையாளம், தெலுங்கு, கன்னடம்-னு அத்தனை south indian movies-லயும் தன்னோட அட்டகாசமான performance-அ குடுத்த, குடுத்துட்டு இருக்க நம்ம கோவை சரளா பண்ணாத characters-ஏ கிடையாது… 15 வயசுல 32 வயசு பெண்மணியா முந்தானை முடிச்சு படத்துல நடிச்ச இவங்க அடுத்த 2 வருஷத்துலயே இன்னும் 2 மடங்கு effort போட்டு 65 வயசு கேரக்டராவும் நடிச்சு அசத்திருப்பாங்க…
சிநேகிதனே பாட்டு கேக்கும்போது ஞாபகம் வர இவங்க ஷாஜகான் படத்துல பாடுன “சிநேகிதனை…” , “அடியே காமாட்சி…”-னு காஞ்சனா-ல பண்ண mind blowing மாமியார் role… அப்போ வந்த கரகாட்டக்காரன்-ல இப்போ எல்லாரும் ரீல்ஸ் பண்ற “என்ன காரைக்குடி பார்ட்டில கூப்டாகோ…” dialogue இப்படி ஒவ்வொன்னும் சரளா பேர் சொல்லும்…
மனோரம்மா ஆச்சி-க்கு பிறகு காமெடி-ல கலக்குற கோவை சரளா நகைச்சுவை மன்னன் வடிவேலுவோட காம்போல பண்ண காமெடி எல்லாமே மக்கள் மனசுல தனி இடத்தை பிடிச்சுது… blockbuster ஹிட் அடிச்சுது… இவங்களோட சக நடிகர்கள் வடிவேலு, கவுண்டமணி, செந்தில், விவேக்-னு காமெடி actors-ஆ இருந்தாலும் சரி… ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா-னு action heros-ஆ இருந்தாலும் சரி… Power packed performance-ல் அத்தனை பேருக்கும் tough குடுப்பாங்க…
இவ்வளவு versatile-ஆன actress-க்கு விருதுகள் கிடைக்காம இருந்துருக்குமா… தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, நந்தி விருதுகள்-னு இவங்க வாங்குன விருதுகள் மட்டும் இல்லாம வாங்க வேண்டிய விருதுகள் நிறைய இவங்கள வரவேற்க காத்திருக்கு… உங்க திரைப்பட வாழ்க்கைல இன்னும் பல சாதனைகள படைக்க Suryan FM சார்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள்…