Specials Stories

நடிகைகளின் Lockdown!!!

Lockdown Heroins
Lockdown Heroins

இந்த Lockdown  நேரத்தில் ஒவ்வொருவரும் வீட்டில் பல வேலைகளை செய்து பொழுதை கழித்து வருகின்றனர்.  அந்த வகையில் பிரபல நடிகைகள் தங்களது Lockdown  நேரத்தை எப்படி கழிக்கிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க

நமிதா

இன்ஸ்டாகிராமில் அழகிய புடவை போட்டோஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்தார் நடிகை  நமிதா. அதுமட்டுமின்றி அழகிய புடவை கட்டி இன்ஸ்டாகிராமில் பூமராங்  விடீயோவையும் பதிவு செய்தார்.  இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா தன்   கணவருடன் இணைந்து பால்கனியில் நடனமாடி வீடியோக்கள் பதிவு செய்தார். அனைவரும் ரசிக்கும் வகையில் அழகிய மேஜிக் வீடியோக்களை சமூக வலைதளங்களில் ஸ்ரேயா பதிவு செய்தார். இது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்காக யோகா செய்து அதன் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

சமந்தா

தனக்கு சமைக்கவே தெரியாது என்று  கூறி வந்த சமந்தா இந்த lockdown  காலத்தில் பயிற்சி எடுக்க ஆரம்பித்துள்ளார். தான் சமையல் கற்கும் வீடியோக்களையும் தேங்காய் உடைக்கும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் சமந்தா.

ரகுல் பிரீத் சிங்

இந்த Lockdown  காலத்தில் தினசரி  வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை ஒரு அழகிய வீடியோவில் பதிவு செய்து அதை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி தன் அண்ணனோடு சிறுவயதில் விளையாடியது போல தற்போதும் வீட்டிற்குள் விளையாடி அந்த வீடியோவையும் இணையத்தில்  பகிர்ந்துள்ளார்  ரகுல் பிரீத் சிங்.

தமன்னா

நடிகை தமன்னா வீட்டில் உடற்பயிற்சி செய்து அதை எப்படி செய்ய வேண்டும் எனவும் கூறி சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவு செய்து வருகிறார்.  அத்துடன் சேர்த்து பழங்களை வைத்து எப்படி  உடற்பயிற்சி மேற்கொள்வது என ஒரு புதுமையான வீடியோவையும் வெளியிட்டுள்ளார். 

ஹன்சிகா

நடிகை ஹன்சிகா  தன் பழைய  புகைப்படங்களை மலரும் நினைவுகளாக இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  அதுமட்டுமின்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நிறைய வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்.

சுருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன்  இந்த Lockdown  காலத்தில் சமைப்பது, பாடல்கள் பாடுவது, புகைப்படங்கள் பகிர்வது  போன்ற பல வேலைகளை பொழுதுபோக்கிற்காக செய்துள்ளார்.  அவர் செய்யும்  அனைத்தையும் சமூக  வலைதளங்களில் பகிர்ந்தோம் வருகிறார்.

பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் தற்போது வீடியோ கேம்ஸ் ஆடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் வீடியோ கேமில் கால்பந்து விளையாட்டு விளையாடி கோல் அடிப்பது போன்ற வீடியோவை சமூக வலைத் தளங்களில் பதிவு செய்தார்.

ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி தன் வீட்டில் பல வேலைகளை செய்து அதை இணையதளத்தில் பதிவு செய்து வந்தார்.  அது  அதுமட்டுமின்றி  தளபதி   விஜயின்  மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கம்மிங்  பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பதிவு செய்தார். 

ரித்திகா சிங்

நடிகை ரித்திகா சிங் தன் வீட்டில் துணி துவைப்பது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைத் தளங்களில் பதிவு செய்தார்.  அது மட்டும்  வெறித்தனமாக  நடனம் கற்று  தான் ஆடும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

காஜல் அகர்வால்

நடிகை காஜல்அகர்வால் தன் தந்தையுடன் வீட்டிற்குள்ளேயே நடைப்பயிற்சி செய்து அதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

About the author

Santhosh