மெட்ராஸ் இராஜகோபாலன் இராதாகிருஷ்ணன், என்ன ஏதோ புது பெயரா இருக்கேன்னு யோசிக்குறீங்களா? சரி, இன்னொரு பெயர் சொல்லும் போது உங்களுக்கு நல்லாவே தெரியும், “நடிகவேள்”.
இப்போ அந்த நீண்ட பெயருக்கானா சொந்தக்காரர் யாருன்னு கண்டுபுடிச்சு இருப்பீங்க, ஆமாங்க நம்ம M.R.ராதா தாங்க. ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி 1907-வது வருடம் திரு.ராஜகோபால், திருமதி.ராஜம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் தான் நம்ம M.R.ராதா. கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும்-ன்னு சொல்லுவாங்க. ஒரு சிலருக்கு அந்த நல்லது அவங்க வாழ்க்கையவே மாத்திடும். அதுக்கு நம்ம M.R.ராதா அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்-ன்னு கூட சொல்லலாம்.
தன் சின்ன வயசுல மீன் மேல அதிகமா மோகம் கொண்ட இவர், தினமும் தன் தாய் கிட்ட மீன் சாப்பாடு வேணும்னு கேட்க, அதை அவங்க நிராகரிக்க, இந்த காரணத்தாலயே வீட்டை விட்டு வெளியேறுனாரு. அப்படி மெட்ராசுக்கு வந்தவர் தான் நம்ம நடிகவேள் M.R.ராதா.
தவறான தருணத்துல சொல்ற உண்மைய விட சரியான தருணத்துல சொல்ற பொய் நமக்கும், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நன்மையை கொடுக்கும். அதே போல மெட்ராஸ்ல தன்னந்தனியா இருந்த அவரு, தனக்கு யாரும் இல்ல-ன்னு பொய் சொல்லி ஆலந்தூர் நாடகப்பள்ளியில சேரந்தாரு. அங்க ஆரம்பிச்ச அவரோட பயணம் கிட்டத்தட்ட நான்கு தலைமுறை வரைக்கும் (1930-1970) நிக்காம தொடர்ந்துச்சு.
தன்னோட பத்து வயசுல இருந்து சின்னச்சின்ன நாடகத்துல நடிக்க ஆரம்பிச்சு தன் வாழ்நாள் முழுக்க 5000-க்கும் மேற்பட்ட நாடகங்கள்-ல நடிச்சிருக்காரு. இப்படி ஆரம்பிச்சது தான் இவர் பயணம். 1954 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இரத்தக்கண்ணீர்’ திரைப்படம் மூலமா சினிமா துறையில் நீங்காத இடமும் பிடிச்சாரு.
குறிப்பா ‘குற்றம் புரிந்தவன் வாழக்கையில் நிம்மதி’ பாடலில் அவரோட மிகச்சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களுக்கு உணர்ச்சிகள் பொங்கும், 50 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நம்ம உதடு அந்த பாட்டை முணுமுணுத்துட்டுத் தான இருக்கு.
இப்படி தன் வாழ்க்கையில பொய், முன்கோபம் இதை எல்லாம் முதலில் தேர்ந்தெடுத்தவர், பின் வந்த நாட்களில் கடின உழைப்பையும், தொழிற்பற்றையும் கடைபிடித்தர். இதுதான் இப்போ வரை அவரோட பெயரை உச்சரிக்க வச்சிருக்கு. நம்ம வாழ்க்கையில தவறுகள் கண்டிப்பா நடக்கும். அப்படி நடக்கும் போது, அந்த தவறுல உள்ள நல்ல விஷயத்தைப் பார்த்தா நம்ம வாழக்கையில உயர்ந்து நிக்கலாம் என்பதற்கும் M.R.ராதா ஒரு சிறந்த உதாரணம்.
அவருடைய பிறந்தநாளை வாழ்த்தி நினைவில் கொள்கிறது சூரியன் FM.