சுழலும் காலங்களில் சில தருணமும் , சில குறிப்பிட்ட வருடங்களும் நம் நினைவில் அழியாமல் இருக்கும். காரணம் அப்போது நாம் சந்திக்கும் மனிதர்கள். அப்படி தமிழ் திரையுலகில் 20 ஆம் நூற்றாண்டில் அறிமுகமான மாதவன் நமக்கு பல நினைவுகளை கொடுத்து வருகிறார்.
அறிமுகமான முதல் படத்திலேயே, சிறந்த புதுமுக கதாநாயகன் விருது பெற்றதில் இருந்து இன்று வரை தன்னை நிரூபித்துள்ளார்.அலைபாயுதே, மின்னலே, டும் டும் டும் போன்ற படங்களால் chocolate boy ஆக வலம் வந்தவர், இளைஞர்கள் மனதை சுண்டியிழுக்க தவறவில்லை.
சாக்லேட் பாய்களுக்கு தமிழ் சினிமாவில் ஆயுள் குறைவு என்பது NASAவே ஒப்புக்கொல்லும் உண்மை. பலர் நம்மை சாக்லேட் பாய் ஆக பார்த்தாலும், தனக்குள் இருக்கும் நடிகனுக்கு தீனி போட துடித்தார்.
முன்னணி நடிகர் படத்தில் கேமியோவில் கெத்து காட்ட நினைப்பவர்கள் மத்தியில் வைரமாக, துணை நடிகர் கதாபாத்திரமாக இயக்குனர்களின் கதைக்கு உயிர் தந்தவர் நம் மேடி . ஹிந்தி சினிமாவிலும் சற்றும் சலனமில்லாமல் கால் பதிக்கத் துவங்கியவர். பல கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்து, வட இந்தியர்களுக்கும் அபிமானமானார்.
மேடியை சிறிது காலம் தேடிய தமிழ் ரசிகர்கள், காலபோக்கில் முன்னணி நடிகர்களின் பாய்ச்சலில் கண்டுக்காமல் இருக்க, யாவரும் நலம் எனும் Horror த்ரில்லர் திரைப்படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கினார் . தமிழ் சினிமாவில் பேய் சீசன் துவங்குவதற்கு முன்னரே வந்த தரமான திரைப்படமாக திகழ்ந்தது.
மீண்டும் ஒரு பிரேக். தமிழ் ரசிகர்கள் பல சாக்லேட் பாய்களை கண்டு குழப்பமடைந்திருந்தது. அந்நேரம் வெளிவந்த “இறுதிச்சுற்று” எனும் படத்தில் Re-entry கொடுத்து, மேடியை கண்டு இந்திய சினிமாவே அசந்து போயிருந்தது. அப்போது தான் மாதவன் ஒரு காலத்தால் அழிக்க முடியாத சாக்லேட் பாய் என்றும் உணர்ந்தது.
கோலிவுட்டின் மேடிக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Article by Rishap