Cinema News Stories Trending

தளபதி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார் மாளவிகா மோஹனன்

தளபதியின் 64-வது படமான மாஸ்டரில் கதாநாயகியாக நடிப்பவர் மாளவிகா மோஹனன். இவர் தளபதியின் பிறந்தநாளில்  வெளியிட்ட வாழ்த்து பதிவில் தளபதி பற்றி நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் அந்த பதிவில் “மாஸ்டர் திரைப்படத்தின் தொடக்க பூஜையின் போது தான் விஜயை முதலில் சந்தித்ததாகவும், அவரை கண்டவுடன் தனக்கு இனம் புரியாத பதற்றமும், தயக்கமும், சந்தோஷமும் இருந்ததாக” பதிவு செய்துள்ளார்.

கடந்த ஆறு மாதத்தில் விஜயுடன் பழகிய நாட்கள் அவரது வாழ்வில் முக்கியமான தருணங்களாக அமைந்தது என குறிப்பிட்ட அவர் விஜய் எப்படிப்பட்ட மனிதராக தனக்கு தெரிந்தார் என்பதையும் பகிர்ந்துள்ளார். “விஜய் எப்போதும் Adventurous (துணிகரமான) , புத்துணர்ச்சி மிக்க பலமான, பாதுகாப்புக்குரியவராக, அன்பானவராக, தாராள மனசுடையவராக இருக்கக் கூடியவர்” என புகழ்ந்துள்ளார்.

அது மட்டுமின்றி இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். “விஜய் ஒரு தயிர் சாத பிரியர் , அவர் இரவில்  சீக்கிரமாகவே தூங்கக் கூடியவர்” என மாளவிகா இப்பதிவில் கூறியுள்ளார். விஜய் அதிகம் பேச மாட்டார் என்பதை “He is a man of few words” எனக் கூறி புகழ்ந்துள்ளார்.

இவ்வாறு விஜயை பற்றி அழகான வார்த்தைகளில் புகழ்ந்து, விஜயுடன் இருக்கும் புகைப்படத்தையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாளவிகா மோஹனன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமும், பதிவும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

விஜயும் மாளவிகா மோஹனனும் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படக்குழு தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது போன்ற போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இது விஜய் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியது என்றே கூறலாம்.

மாளவிகா மோஹனனின் இன்ஸ்டா பதிவை கீழே காணுங்கள்.