மன்மதலீலை பட வெளியீட்டை முன்னிட்டு சமீபத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே மற்றும் ரியா சுமன் மூவரும் சூரியன் FM நேர்காணலில் பங்கேற்றனர்.
அப்போது சம்யுக்தாவிடம் மன்மதலீலை பட ட்ரெய்லரை பார்த்து விட்டு வீட்டில் என்ன கூறினார்கள் என்று கேள்வியெழுப்பினோம். அதற்கு பதிலளித்த சம்யுக்தா, “என் அம்மா தினமும் எனக்கு 2 முறை Call செய்து பேசுவார். மன்மதலீலை ட்ரெய்லர் வெளியானதிலிருந்து எனக்கு Call வரவில்லை.
என் அப்பா கூட பேசினார். அன் அம்மா இன்னும் பேசவில்லை. அது ஏனென்றும் எனக்கு தெரியும். அவரிடம் பேசும் போது ட்ரெய்லர் எப்படி இருந்தது என்று நான் கேட்பேன். அதற்கு அவரால் பதில் சொல்ல முடியாது. இல்லையெனில் அவர் என்னை திட்டுவார். என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்” என்று பதிலளித்தார். மேலும் மன்மதலீலை படப்பிடிப்பில் நடந்த நிறைய சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
முழு நேர்காணலை கீழுள்ள இணைப்பில் காணுங்கள் :