Specials Stories

காந்த குரலின் கதை !!!

ஒரு நாள் மெல்லிசை மன்னர் M. S. V இசைத்த பாடலை பாட அந்த பாடகர் வராத காரணத்தால் சினிமா துறையில் நுழைய காத்திருந்த மனோவை பாடச் சொன்னார்கள். அங்கே தொடங்கியது ஒரு பெருங்கடலின் சிறு அலை.

தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடிவரும் ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகர் தான் நாகூர் பாபு. பின்னர் இவருக்கு என்று ஒரு தனி அடையாளம் வேண்டுமென்று இசைஞானி இளையராஜா இவரது பெயரை மனோ என மாற்றினார்.

Mano (singer) - Wikipedia

பின்னர் மனோவும் சின்ன குயில் சித்ராவும் சேந்து பாடும் பாடல்களுக்கே தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகின. இந்த combination மட்டுமின்றி தமிழ்ப்படங்களில் கமல் மற்றும் ரஜினி படங்களில் வரும் punch dialogue-களுக்கு ரசிகர்கள் கைத்தட்டி ரசித்ததற்கு மனோவின் குரல் ஒரு முக்கிய காரணம்.

பாடகராய் மட்டுமின்றி நடிகர்,பின்னணி குரல் தருதல், இசையமைப்பாளர் போன்ற பிரிவிலும் பிரபலமானார் மனோ. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடியுள்ளார். மதிப்புமிக்க கலைமாமணி விருது பெற்றதோடு, சின்னத்தம்பி திரைப்படத்தில் தூளியிலே என்ற பாடலுக்கும் தமிழ் நாடு அரசின் விருது பெற்றர்.

இசை என்னும் தாயை தேடி செல்லும் குழந்தை போல மனோபாவம் கொண்ட மனோவின் தேடலும், கலை மீது கொண்ட காதலும் மேலும் மேலும் வெற்றி அவரை அணைத்துக்கொள்ள காரணமாயிருந்தது . பாடும் நிலா SPB-யை குருவாய் கொண்ட மனோ தமிழ் திரைப்பட பாடல் மூலமாக தனக்கென ரசிகர்களை சம்பாதித்தார்.

காந்த குரலால் நம் மனதை கவர்ந்து இன்னும் இளமை மனம் கொண்ட பாடகர் மனோவிற்கு சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  • Article by RJ Sumee

About the author

alex lew