மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது நாம் அறிந்ததே. தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் ஆல்பம் யூடியூபில் 700 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை புரிந்துள்ளது.
அனிருத் இசையில் மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே தமிழ்நாடு மட்டுமின்றி அகில இந்திய அளவில் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்த பாடல்களாக அமைந்தது. குறிப்பாக இப்படத்தில் தளபதி விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் விஜய் ரசிகர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் – ல் ஒரு முறையாவது வலம் வந்து இருக்கும் என்றே கூறலாம்.
மாஸ்டர் படக்குழுவினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரை யும் உலக இசை ரசிகர்களையும் நடனமாடி வீடியோ பதிவிட செய்தது வாத்தி கம்மிங் பாடல். இப்பாடலுக்கு ஜெனிலியா சிம்ரன் போன்ற பல உச்ச நட்சத்திரங்களும் நடனமாடி சமூக வலை தளங்களில் வீடியோக்களை பதிவிட்டனர். சினிமா பிரபலங்களை தவிர பல கிரிக்கெட் வீரர்களும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோக்கள் பதிவிட்டனர்.
பாடல்களைத் தாண்டி மாஸ்டர் திரைப்படத்தின் பின்னணி இசைக்கும் தியேட்டர்களில் விசில் பறந்தது. இப்படிப்பட்ட மாஸான மாஸ்டர் ஆல்பம் யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது தளபதி விஜய் ரசிகர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் ஒரு சந்தோஷமான விஷயமே.
இந்த மகிழ்ச்சியான நிகழ்வைக் கொண்டாடும் விதத்தில் ரசிகர்கள் ட்விட்டரில் #MasterAlbumHits700M என்ற டேகை ட்விட்டரில் ட்ரென்ட் செய்தனர்.
மாஸ்டர் திரைப்படத்தின் படக்குழுவினருக்கும் இசை அமைப்பாளர் அனிருத் அவர்களுக்கும் சூரியன் எப்எம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.