நாளை (13 ஜனவரி ) தளபதி விஜய் ரசிகர்களுக்கு மாஸ்டர் விருந்து திரையில் காத்திருக்கின்ற நிலையில், மிகவும் Surprise-ஆன Promo ஒன்றை மாஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கில்லி திரைப்படத்தின் Theme Song-ஐ remix செய்து வெளியிடப்பட்ட இந்த promo ரசிகர்களுக்கு Extra உற்சாகத்தை கொடுத்துள்ளது.
கபடி என்று சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவது கில்லி திரைப்படம் தான். அத்திரைப்படத்தில் வித்யாசாகர் இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் மெகாஹிட் ஆனது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த மெகாஹிட் பாடல்களுள் ஒன்றான ” கபடி கபடி ” பாடலை அனிருத் Remix செய்து மாஸ்டர் திரைப்படத்தின் ஓரு பாடலாக அமைத்துள்ளார். Promo-வை வைத்து பார்க்கும்போது இந்த பாடல் ஒரு சண்டை காட்சியில் இடம்பெறுவது போல தெரிகிறது.
ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தின் வெளியான பாடல்கள் அனைத்தும் நம்மை துள்ளாட்டம் போட வைத்துள்ள நிலையில், இந்த remix பாடல் தளபதி விஜயின் throwback கில்லி geth-ஐ நமக்கு ஞாபகப்படுத்தியுள்ளது. இந்த காட்சி திரையில் வரும்போது திரையரங்குகளில் திருவிழாவாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
மாஸ்டர் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இப்படம் மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மாஸ்டர் திரைப்படத்தின் #VaathiKabbadi promo-வை கீழே காணுங்கள்.