Youtube-ல் புதிய Record-களை உருவாக்குவதும் அதை தன் படங்களின் அப்டேட்களை வைத்தே முறியடிப்பதும் தளபதி விஜய்க்கு கை வந்த கலை. அந்தவகையில் மாஸ்டர் திரைப்படத்தின் டீஸர் இந்தியாவிலேயே 5 லட்சம் Comment-களை பெற்ற முதல் டீஸர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
தீபாவளியன்று வெளிவந்த மாஸ்டர் டீஸர் வெளியான சில வினாடிகளில் இருந்தே இணையத்தை ஆள தொடங்கி விட்டது என்றே கூறலாம்.இந்த டீஸரை 4.5 கோடிக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர், சுமார் 25 லட்சம் பேர் Like செய்துள்ளனர். இப்படத்தை குறித்த ஒவ்வொரு Update-ம் தளபதி ரசிகர்களுக்கு தரமான விருந்தாய் அமைந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்கள் என்ற செய்தி வந்ததிலிருந்தே தளபதியின் ரசிகர்களும் மக்கள் செல்வன் ரசிகர்களும் இந்த ஹீரோ-வில்லன் Combo-வை திரையில் காண வெறித்தனமான waiting-ல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் 5 லட்சம் Comment-களை பெற்றுள்ளது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் தித்திப்பான இத்தருணத்தை கொண்டாடி வரும் நிலையில் “கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா ” என நினைக்க வைக்கும் வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீஸர் பற்றிய Update-ம் வெளிவந்துள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு Version டீஸர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த செய்தியையும் தளபதியின் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் இணையத்தில் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அது பொங்கல் ரிலீஸ் ஆக இருந்தால் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் தளபதி பொங்கலாக அமையும்.
மாஸ்டர் திரைப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மாஸ்டர் டீஸரை கீழே காணுங்கள்.