Cinema News Stories

உலகத்தர உள்ளூரு வாத்தியாரு !!!!

தளபதி விஜயின் திரைப்படங்கள் வெளிவரும் போதெல்லாம் Box Office-ல் புதிய வரலாறுகள் உருவாகிக் கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் கடந்த வாரம் வெளிவந்த படங்களுள் உலகிலேயே நம்பர் 1 திரைப்படம் எனும் பெருமையை மாஸ்டர் திரைப்படம் பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்தது. நீண்ட நாட்கள் திரையரங்குகளுக்கு செல்லாத பலர் மாஸ்டர் திரைப்படத்தை காண அலை கடலென திரண்டு தியேட்டர்களுக்கு சென்றனர். அதன் விளைவாக மாஸ்டர் திரைப்படத்திற்கு எதிர்பார்த்தது போல Mass Opening கிடைத்தது.

இப்படம் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என 4 வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டது. வெளியான அனைத்து மொழிகளிலேயுமே தளபதி வாத்திக்கு கிடைத்த வரவேற்பு வேற லெவல் என்றே சொல்லலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனம் கவர்ந்த படமாக மாஸ்டர் அமைந்துள்ளது.

இதன் விளைவாக உலக அளவில் கடந்த பொங்கல் வாரத்தில் வெளியான படங்களுள் Box Office-ல் நம்பர் 1 இடத்தை மாஸ்டர் திரைப்படம் பிடித்து புது வரலாறு படைத்துள்ளது. ஒரு இந்திய திரைப்படம் இந்த அங்கீகாரத்தை பெறுவது இதுவே முதல் முறை என்பது நாம் அனைவரும் பெருமை பட வேண்டிய விஷயம்.

மாஸ்டர் படக்குழுவினருக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

About the author

alex lew