வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சிம்பு ரசிகர்களும் யுவன் ஷங்கர்ராஜா ரசிகர்களும் இப்பாடலை ஆரவாரத்துடன் கேட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
மெஹெரசயலா என்னும் இப்பாடல் இன்று வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு வந்ததிலிருந்தே சினிமா ரசிகர்களும், இசை ரசிகர்களும் இப்பாடலை கொண்டாட தயாராகி விட்டனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இனிமையான இசையும், மதன் கார்க்கியின் அற்புதமான வரிகளும் இப்பாடலுக்கு பலம் சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
பொதுவாக யுவன் பாடும் பாடல்கள் அனைத்தும் அவரது ரசிகர்களின் Playlist-ல் என்றும் நீங்கா பாடல்களாக அமையும். அந்த வகையில் மெஹெரசயலா பாடலும் யுவன் ரசிகர்களுக்கு ஒரு இனிமையான விருந்தாக அமைந்துள்ளது.
இப்பாடல் ஒரு திருமண vibe பாடலாக திரைப்படத்தில் இடம்பெறும் என தெரிகிறது.இப்பாடல் மாநாடு திரைப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
மெஹெரசயலா பாடலின் lyric வீடியோவை கீழே காணுங்கள்.