உலகத்தின் பந்தங்களை எல்லாம் நமக்கு புரிய வைத்த ஒரு உன்னத பந்தம் நம் தாய். அப்படிப்பட்ட தாயை கௌரவப்படுத்தும் வகையில் சூரியன் FM சார்பில் அன்னையர் தின கவிதை போட்டி நடத்தப்பட்டது.
கடந்த மே 12-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடந்த இப்போட்டிக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. பத்து வரிகளுக்கு மிகாமல் அன்னையைப் பற்றி அழகிய கவிதை ஒன்றை எழுதுமாறு கேட்டிருந்தோம். போட்டி தொடங்கிய முதல் நாளில் இருந்தே பலரும் தங்களது அன்னையை நினைவில் கொண்டு பல அழகிய கவிதைகளை எழுதி போட்டியில் பங்கேற்றனர்.
500க்கும் மேற்பட்ட கவிதைகள் இப்போட்டியில் இடம்பெற்றது. 500 சிறந்த கவிதைகளில் 10 மிகச் சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுக்கும் பணி நடுவர்களுக்கு ஒரு சவாலாகவே அமைந்தது. பங்கேற்பாளர்களின் கவிதைகளை படிக்கும் போது தான் தெரிந்தது போற்றப்பட்டது அன்னைகள் மட்டுமல்ல அழகிய தமிழும் தான். தூய தமிழில் தாயைப் பற்றி தத்ரூபமான தனித்துவமான வரிகளில் பலரும் உணர்ச்சிகரமான பல கவிதைகளை எழுதி அனுப்பினர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றியாளர்கள் மட்டுமின்றி இக்கவிதை போட்டியில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்னையர் தின கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களின் 10 கவிதைகளை கீழே காணுங்கள்.