முரளியோட முதல் படம் பூவிலங்கு தான். யார் இந்த முரளி? பையன் புதுசா இருக்கான்???
பெருசா கலரா இல்ல ..நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி ஸ்டைல் கூட இல்லையே ? பாக்கவே அப்பாவியா பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்கான் , ஆனா பெருசா வருவான்னு தோணுதுப்பா .
இந்த பையன் திரையில அழுதாலோ, படத்துல தோத்து போனாலோ பாக்குறவுங்க அத்தனை பேர் மனசும் எப்படியாவது இந்த பையன் ஜெய்ச்சிரணும்னு கிடந்து அடிச்சுக்கிது . மணி மணியா வார்த்தைகளை கொஞ்சமா பஞ்சமாவே பேசினாலும் நம்ம உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிற கதைக்களம் மணிரத்னம் படங்களுக்கு மட்டுமே உரித்தான பாணி. பகல் நிலவு பளிச்சுனு நிலவுக்கு நிகரான அழகா இருக்குற ரேவதி கூட ஜோடி போட்டு முரளி , ரசிகர்கள் மனசுக்கு இன்னும் உடும்பு பிடியா இறுக்கி பிடிச்சு போயிட்டாரு.
என்னதான் ஒரே பாட்டுல முன்னேறும் கதைக்களம் தமிழ் சினிமாவுக்கு புதுசுனாலும் இவரோட career graph-ல பள்ளத்தாக்குகளுக்கு முற்றுப்புள்ளி வச்சு வசந்த காலம் தந்தது , அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் நம்ம எல்லாருக்கும் பிடிச்ச இயக்குனர் விக்ரமனின் “புது வசந்தம் ” தான் .படத்துல நாலு நாயகர்கள் இருந்தாலும் காமெடிக்கு சார்லி, நடனம் ஆட ஆனந்த் பாபு , குணச்சித்திர வேஷத்துல வெங்கடேஷ் , கதாநாயகியா சித்தாராவும் ரொம்ப எதார்த்தமா பெண்ணுக்கும் ஆணுக்குமான நட்போட ஆரோக்கியத்தை சொன்னதோடு சேர்த்து கதாநாயகனா நம்ம முரளி ரசிகர்கள் மனசுல gum போட்டு ஒட்டிகிட்டாரு.
ஹீரோ என்றால் ஆடணும், பாடணும் , Action sequence-னு அத்தனையும் இருக்கலாம்னு சொன்ன நம்ம சினிமா,
ஹீரோ ஒரு பொண்ணோட நல்ல நண்பனா தோல் கொடுக்கலாம்னு, நம்ம இதயம் முரளி கடைசி வரை காதலை ஹீரோயின் கிட்ட சொல்லலானாலும் பெண் ரசிகைகளோட இதயத்துல இடம் பிடிச்சுட்டாரு.
இதயம் முரளியோட அழகான characterization அவரு நிஜ வாழ்க்கையிலும் இருந்துச்சு . பெரிய cinema தயாரிப்பாளர் சித்தலிங்கையாவின் மகனா அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதே இல்லை. சினிமாவின் மூளை முடுக்கெல்லாம் தெரிஞ்சாலும் என்னைக்குமே multi star cast படங்களுக்கு no சொன்னதே இல்லை.
சமுத்திரம் , ஆனந்தம்-னு நமக்கு ரொம்ப புடிச்ச படங்கள்ல சரத் குமார் , மம்மூட்டியோட ஒற்றுமையான ரொம்ப உழைக்கிற , பொண்டாட்டி கிட்ட அர்ச்சனை வாங்கிற நம்ம அன்பான சின்ன அண்ணன் முரளி தான் .
மணிக்குயில் , மஞ்சுவிரட்டு கிராமத்து கதைகளங்கள் கூட கனகச்சிதமா இவருக்கு பொருந்துச்சு .
நடிகர் முரளியை அவரது பிறந்தநாளில் நினைவு கூறுவதில் பெருமிதம் கொள்கிறது சூரியன் FM.
Article by RJ Akshaya