பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் “முருங்கக்காய்“. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டது.
எஸ்.எல்.எஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை ஆர்.எஸ். மணி இயக்குகிறார். இப்படத்தின் டைட்டிலையும், முருங்கக்காய் ஃபர்ஸ்ட் லுக்கையும் வைத்துப் பார்க்கும்போது இப்படம் ஒரு காமெடி திரைப்படமாக அமையும் என தெரிகிறது.
குமார் ஸ்ரீதர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிரேம்குமார் சிவபெருமான் இப்படத்திற்கு இசையமைக்க பிரியன் இப்படத்தை எடிட் செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்படத்தை தயாரிக்கும் எஸ்.எல்.எஸ் ஃபில்ம் -இன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் பவர் ஸ்டாருடன் இணைந்து மாரிமுத்து, தமிழ் செல்வி ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் இருந்தே இணையத்தில் இந்த போஸ்டரை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இப்படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படத்தின் போஸ்டரை #MurungakkaiFirstLook என்ற டாஃகில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்…