சமீபத்தில் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் பிரதீப் குமார் ‘குதிரை வால்’ பட வெளியீட்டை முன்னிட்டு சூரியன் FM நேர்காணலில் பங்குபெற்றார். அப்போது நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் நிறைய பாடல்களை கிட்டாரை இசைத்தபடியே பாடியும் காண்பித்தார்.
குதிரைவால் படத்திலிருந்து பறந்து போகின்றேன், போகும் வழிகள், மற்றும் தாலாட்டு, மேயாத மான் படத்திலிருந்து மேகமோ அவள், காதலன் படத்திலிருந்து என்னவளே அடி என்னவளே, மே மாதம் படத்திலிருந்து என்மேல் விழுந்த, ஜெய் பீம் படத்திலிருந்து தல கோதும் இளங்காத்து உள்ளிட்ட பாடல்களை நமக்கு பாடிக் காட்டினார்.
அப்போது அவரிடம் யுவன் சங்கர் ராஜாவிற்கு ஒரு பாடல் dedicate செய்து பாடுமாறு கூறினோம். அப்போது யுவன் குறித்து பேசத் தொடங்கிய பிரதீப் குமார் “யுவனின் பாடல்கள் நிறைய எனக்கு பிடிக்கும். மிகவும் பிடித்த இசையமைப்பாளர் அவர்.
காதல் கொண்டேன் படம் வெளியான சமயத்தில் அந்த படத்தின் பாடல் கேசட்டை வாங்கி பலமுறை கேட்டு கேட்டு தேய்த்திருக்கிறேன்” என்று கூறினார். பின்னர் ‘சொல்லாமல் தொட்டுச் செல்லும்’ பாடலை யுவன் சங்கர் ராஜாவிற்காக பாடி dedicate செய்தார்.
முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள்!