வைகை புயல் வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கும் ‘நாய் சேகர் Returns’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது youtube-ல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின்பு வடிவேலுவை திரையில் காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நாய் சேகர் Returns திரைப்படத்தை படிக்காதவன், மாப்பிள்ளை, மருதமலை போன்ற commercial மசாலா திரைப்படங்களை இயக்கிய சுராஜ் இயக்குகிறார். இப்படம் சுராஜ் மற்றும் வடிவேலுவின் திரையுலக பயணத்தில் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வடிவேலு திரையுலகில் active-ஆக இல்லாத காலத்திலும் சமூக வலைதளங்களில் Meme-கள் மூலம் அனைவரின் Phone-களிலும் வலம் வந்து கொண்டுதான் இருந்தார். அவரது நகைச்சுவையான வசனங்களும், சிரிப்பூட்டும் Reaction-களும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு உவமையாய் விளங்கியது.
படங்களில் அதிகம் நடிக்காத போதும் வடிவேலுவுக்கு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை. இந்நிலையில் கோலிவுட்டில் Mass-ஆக comeback கொடுக்க வைகைப்புயல் தயாராகிவிட்டார் போல தெரிகிறது. நாய் சேகர் Returns திரைப்படம் வடிவேலுவுக்கு அவரும், ரசிகர்களும் எதிர்பார்க்கும் Comeback-ஐ கொடுக்கும் என நம்பலாம்.
நாய் சேகர் Returns திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இன்று வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் ஒரு side-காரில் மூன்று நாய்களுடன் வடிவேலு விசித்திரமான முகபாவனையுடன் வண்டி ஓட்டிக்கொண்டு வருகிறார்.
இந்த மோஷன் போஸ்டரில் வடிவேலுவின் பிரபலமான வசனங்களான “ஹே ஹூ ஆர் யூ?”, “ஹேய் ஹவ் ஆர் யூ ?” ஆகிய வசனங்கள் இடம் பெற்றுள்ளது. தலைநகரம் திரைப்படத்தில் வடிவேலு ஏற்று நடித்த நாய் சேகர் கதாபாத்திரத்தின் பெயரை கொண்டு உருவாகி வரும் இப்படத்தை குறித்த முதல் அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்கள் இப்படத்தை கொண்டாட தொடங்கிவிட்டனர்.
இப்படத்தின் அடுத்தடுத்த update-கள் விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நாய் சேகர் திரைப்படம் வடிவேலுவின் comeback திரைப்படமாக மாறி மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை கீழே காணுங்கள்.