ராஷ்மிகா மந்தனா , இந்த பெயரை கேட்டதும் நம்ம மனசுல பதிந்த முகம் நிச்சயமா சிரிப்போடு இருக்கும், அதான் ராஷ்மிகா…
திரைக்கு முன்னால் எப்படியோ தெரில, ஆனால் திரைக்கு பின்னால் எப்போதும் ராஷ்மிகா சிரித்த முகத்தோட இருப்பார். அதற்கான காரணத்தை அவரே சொல்றார், அது என்னனு பின்னாடி சொல்றேன். 1000 வாட்ஸ் பல்பு போல ஒரு திடீர் வெளிச்சத்தை தரக்கூடியது அந்த சிரிப்பு.
நாம என்ன மனநிலையில் இருந்தாலும் குழந்தைகளின் சிரிப்பை பார்க்கும் போது நம் மனதில் மகிழ்ச்சி பரவும், குழந்தைங்க மட்டுமில்ல பெரியோர் சிலரின் கபடமில்லா சிரிப்பும் நம்மை இன்பமுற செய்யும். அதுல முக்கியமான ஒருத்தர் ராஷ். கன்னடத்து பைங்கிளி பார்ட் 2, Smiling Queen, National Crush of India-னு எவ்வளவோ அடையாளங்கள். ஆச்சர்யம் என்னனா அத்தனையும் பொருத்தமானவை.
கர்நாடக குர்க் மாவட்டத்துல இயற்கையால ஆசிர்வதிக்கப்பட்ட குடகு மலைக்கு பக்கத்துல இருக்க ஒரு ஊருல ஒரு நடுத்தர குடும்பத்தில் மகளாய் பிறந்திருக்கார் ராஷ்மிகா. படித்தது Psychology, Journalism, English literature னு ஒரு தனி பட்டியல், அக்ஷய் குமார் சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்ட ஒரு தனியார் அழகுப் போட்டில ஜெயிச்சிருக்கார் ராஷ்மிகா, வாழ்க்கையே மாறிடுச்சு.
அதனால கிடைத்த வாய்ப்பு தான் தன் முதல் படமான Kirik பார்ட்டி. அதுக்கப்பறம் தெலுகு படமான கீதா கோவிந்தம்-ல வர “இன்கேம் இன்கேம் பாடல் மூலமா உலகளாவிய கவனம் ராஷ்மிகா மேல பட்டுச்சு” அதை சரியாக பயன்படுத்தி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். “யாரையும் இவ்ளோ அழகா பாக்கலைனு” தமிழ் சினிமாவும் அரவணைக்க, முக்கியமான மிஷன் இருக்குனு பாலிவுட்டும் கூப்பிட்டுக்கொள்ள, Pan India artist ஆக மட்டுமில்ல, National Crush ஆகவும் ஆனார் ராஷ்மிகா.
ரஷ்மிகாவுக்கு மாற்றா ஒரு நடிகை வந்திடக் கூடாது என்பது அவரது அவா, அதனால தான் தன் இடது கையில “Irreplaceable” னு Tattoo குத்தியிருப்பார். அதெல்லாம் சரி உங்க இன்ஸ்பிரஷன் யாருனு கேட்டா, Hollywood Emma Watson & Kollywood Sridevi-யும் சேர்ந்த கலவையா இருக்கணும்னு சொல்றாங்க. On a serious note கொஞ்ச நாளைக்கு முன்னாடி Insta-ல ஒரு நடிகையாக இருப்பது எவ்வளவு கஷ்டம்னு ஒரு பதிவு போட்ருந்தாங்க, அவ்ளோ உண்மை. ஆனாலும் என்னைக்கும் புன்னகைக்க மறந்ததில்ல, மறுத்ததும் இல்ல ராஷ்.
சரி ஆரம்பத்துல சொல்ல வந்த விஷயத்தை இப்போ சொல்றேன். எல்லோரும் எப்போதும் சிரித்த முகத்தோட இருக்கணும்னு சொல்றாங்க ராஷ்மிகா. குறிப்பா பெண்கள்… கவலையா இருக்கும் போதும் சிரிங்க, கோவமா இருக்கும் போதும் சிரிங்க, அப்படி இருந்தா உங்களுக்கு ஒரு நாள் உண்மையான மகிழ்ச்சியோட சிரிப்பு வரும், அது நிரந்தரமானதா இருக்கும்னு சிரிச்சிட்டு அழகா கண்சிமிட்டுகிறார். அதே மகிழ்ச்சியான சிரிப்போடு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சூரியன் FM சார்பா ரஷ்மிகாவுக்கு சொல்லிக்குறோம். Happy Birthday Rashmika Mandhna…!