தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. இது நம்மவர்கள் வழிகாட்டுதல். தாயை வணங்கினால் போதும் நாம் எந்த ஒரு கோவிலுக்கும் போகவேண்டியதில்லை. அதே போல் தந்தை சொற்களை மதித்து நாம் நடந்தாலே போதும் நாம் எந்த ஒரு மந்திரமும் உச்சரிக்க வேண்டியதில்லை.
இது நேரடியான பொருள். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தெய்வத்திற்கு முன்பாக நாம் அறிந்து கொள்ளவேண்டிய தெய்வங்கள் தாயும் தந்தையும். இதுவும் நம்மவர்கள் சொன்னதுதான். தாய்க்கு ஒரு தினம் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை. தந்தைக்கு ஒரு தினம் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை.
இரண்டு பேரையும் பெருமை படுத்தும் ஒரு தினம் பெற்றோர் தினம் ஜூலை மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பெற்றோர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம், குழந்தைகளின் வாழ்க்கை வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது பொறுப்பான பெற்றோரை ஊக்குவிப்பதுதான். கல்வி கற்க பெற்றோர் உதவுகிறார்கள்.
தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, பெற்றோர்கள் எல்லா தியாகங்களையும் செய்கிறார்கள் மற்றும் தங்கள் சொந்த வாழ்க்கைச் செலவைக் குறைக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறார்கள். அவர்கள் நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார்கள். குடும்பத்தின் ஆதரவு ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கம் மற்றும் உறவுகளின் மதிப்பைக் கற்பிக்கிறார்கள். பெற்றோர்கள் சிறந்த நண்பர்கள். நீங்கள் விழும்போது உங்களைப் பிடிக்க பெற்றோர் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். இப்படி பெற்றோர்கள் முக்கியமானவர்கள் என்பதற்கு பல காரணங்களை சொல்லலாம். பெற்றோரின் முயற்சிகளையும், அவர்களின் வாழ்நாள் தியாகத்தையும் போற்றும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மன, உணர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை வழங்குகிறார்கள். அதோட மட்டுமில்லாமல் குழந்தைகளின் வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். பெற்றோர் இறைவனின் அருட்கொடை. அவர்கள் இடத்தை யாரும் எடுக்க முடியாது. அவர்களுக்கு நிகர் அவர்களே. பெற்றோரை போற்றி வணங்குவோம் வாழ்வில் வளம் பல பெறுவோம்.