சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவர்களுக்கு எல்லா கதவுகளும் திறந்திருக்கும். இதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு நம்ம லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. அவர் ட்விட்டர், Facebook மற்றும் இன்ஸ்டாகிராமில் இல்லை. அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதில்லை. விருது விழாக்களில் வித்தியாசமாகத் தோன்றுவதைத் தவிர, விருந்துகள் அல்லது கூட்டங்களில் அவர் அரிதாகவே காணப்படுவார்.
ஆனாலும், அவருக்கு தமிழகத்தின் எல்லையைத் தாண்டியும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். காதல் காட்சிகளுக்கும், பாடல்களுக்குமே கதாநாயகிகள் என்ற நிலை இருந்த காலமும் உண்டு. தற்போது அந்த நிலை வேகமாக மாறி வருகிறது என்பது உண்மை. 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா.
ஒரு கிராமத்து பின்னணியில் உருவான ஐயா திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தி போனார். 2013 இல் வெளிவந்த ராஜாராணி திரைப்படம் நயன்தாராவிற்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. நயன்தாராவிற்கென தனி ரசிகர் கூட்டம் உருவானது. இன்றைக்கு நயன்தாரா தனக்கென ஒரு தனித்துவமான ஸ்டைலை பின்பற்ற தொடங்கியுள்ளார். திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் நயன்தாராவை கொண்டாடுகின்றனர்.
படத்தை முழுக்க கதாநாயகியே தாங்கிச்செல்லும் போக்கு பாலிவுட்டில் தடம் பதித்தது. வித்யாபாலன், கங்கனா உள்ளிட்ட கதாநாயகிகள் கதநாயகர்களுக்கு இணையாக பாலிவுட்டை கலக்கினர். அதே style-ஐ முன்னிறுத்தி தமிழில் களம் இறங்கினார் நயன்தாரா. மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என நயன்தாரா கதையை மட்டுமே நம்பி நடிக்கத் தொடங்கினார்.
இது தான் ஸ்டைல் என்று கணிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டியதே நயன்தாராவின் வெற்றி. நயன்தாராவின் நேர்மையான அணுகுமுறை தான் அவரை தனித்துவமாக காட்டுகிறது . “வேறு விதத்தில் விஷயங்களைச் செய்வதை அவர் ஒரு குறிக்கோளாக பின்பற்றுகிறார்”, என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறிருக்கிறார்.
நயன்தாராவிற்கு பக்க பலமா இருக்குறது அவங்களோட காதலனும் இயக்குனருமான விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவனைப் பற்றி தனக்கு பிடித்தது என்ன என்பது பற்றி அவர் கூறுகையில், “இதுவரை நான் சந்தித்த ஆண்கள் ஒரு பெண்ணின் வெற்றியை எப்படி தடுப்பது என்று நினைப்பார்கள். ஆனால் என் விஷயத்தில் விக்னேஷ் சிவன் என் வாழ்க்கையில் வந்த பிறகு தான் நான், நான் ஆகிவிட்டேன். அதிக லட்சியம் கொண்டு பிஸியாக மாற தொடங்கிவிட்டேன் .நான் செய்வதில் நான் மிகவும் சிறந்தவள் என்று அவர் என்னை உணர வைக்கிறார்.” என்று கூறியுள்ளார்.
- Parvathy Stuns in New Photoshoot: A Look at the Indian Actress’s Beauty
- Happy Birthday to the Master of Realism: Vetrimaaran
- Bollywood actress Deepika Padukone baby bump pregnancy photoshoot
- இசைஞானியின் இசை வாரிசு!
- வித்தியாசமான த்ரில்லர் கதை “பிளாக்”
விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரௌடி தான்’ படத்தில் பணிபுரியும் போது நயன்தாராவை காதலித்தார். இந்த லாக்டவுனின் போது லேடி சூப்பர் ஸ்டாரும் விக்னேஷ் சிவனும் சில தரமான நேரத்தை ஒன்றாக செலவிட்டனர். ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் தொழில் ரீதியாக லட்சியங்கள் இருப்பதாகவும், முடிச்சு போடுவதற்கு முன்பு அதை அடைய விரும்புவதாகவும் கூறினார்.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அவர்களுக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Article by RJ Saranya