Stories Viral

Twitter-ஐ வீழ்ச்சியடைய செய்யுமா Threads?!

நம்ம FaceBook, Instagram, Whatsapp, Twitter போன்ற சோசியல் மீடியாக்களை அதிகமா பயன்படுத்திட்டு வந்துருக்கோம், இப்படி பல வகையான சோசியல் மீடியாக்கள் வலம் வந்தாலும் இந்த JULY 6 ஆம் தேதி நம்ம மெட்டா உடைய CEO ஆன Mark Zuckerberg, Threads அப்படினு ஒரு புது சோஸியல் மீடியவை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்காரு. இந்த Threads App அப்படியே Twitter போல இருக்கு.

ட்விட்டரின் ஓனரான எலன் மஸ்க் சில வாரங்களுக்கு முன்னாடி Twitter யூஸ் பண்ணுறதுல சில தடைகளை போட்டிருந்தாங்க, இதுக்கு ஆறுதலா META நிறுவனம் நீங்க எங்ககிட்ட வாங்க FACEBOOK, WHATSAPP, INSTAGRAM, THREADS-னு பல விஷயங்கள் நம்மகிட்ட இருக்குனு சொல்லி Threads-அ அறிமுகப்படுத்திருக்காங்க. இன்னொரு முக்கியமான விஷயம் Twitter Verified Tick எப்படி மாத சந்தால கொடுக்குறாங்களோ அதேபோல Instagram-க்கும் மாத சந்தால Verified Tick கொடுத்துட்டு வராங்க.

இந்த Verified Tick யாரு வேணும்னாலும் வாங்கிக்கலாம்னு சொல்லிருக்காங்க. இன்ஸ்டாகிராம்ல யாரெல்லாம் Verified Tick வச்சிருக்காங்களோ அவங்க இந்த Threads-ல Account open பண்ணும் போது Verified Tick-ம் சேர்ந்து வந்துடுது. இந்த Threads app உடைய logo பாக்க தமிழ் எழுத்தான ‘கு’ என்ற எழுத்தைப்போல இருக்கு, இன்னும் சொல்ல போனா நம்ம தமிழ் பயனாளர்கள் எல்லாரும் இத ‘கு’ஆப் அப்படினு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

இன்னும் சொல்லப்போனா ஒரு படி மேல போய் Twitter-க்கு எதிரா வந்துருக்கு, அந்த twitter logo-ல உள்ள குருவி கூ கூ-னு கூவும் அத Base பண்ணி வந்ததால இதுக்கு ‘கு’ அப்படினு லோகோ வச்சிருக்காங்கனு சொல்லிட்டு இருக்காங்க. Thread app, Twitter உடைய இன்னொரு வடிவம்னு சொல்லலாம், அதுல உள்ளது போலவே 85% ஒத்துபோதுனு சொல்லிட்டு வராங்க. Instagram-ல நம்ம Text-ஆ எந்த Post-ம் போட முடியாது,

அதனாலதான் அதுக்கு நாங்க தனியா ஒரு சோசியல் மீடியாவை உருவாக்கணும்னு இந்த Thread -ஐ வடிவமைத்தோம், அப்படினு அவங்க தரப்புல சொல்லிருக்காங்க. இந்த Thread புதுசுங்குறதால ஒரு சில bugs-ம் இருக்கு. இந்த Thread ஆப்-க்குனு தனியா Account உருவாக்கணும்னு அவசியம் இல்ல. நம்மளுடைய Instagram Account-அ வச்சு இதுல account open பண்ணி பயன்படுத்துற மாதிரிதான் உருவாக்கிருக்காங்க,

இன்னும் சிலர் ஏற்கனவே இருக்குற Social Media எல்லாம் நம்மள அடிமை படுத்தி வச்சிருக்குறது போதாதுன்னு இதுல புதுசா இன்னொன்னா?, அபப்டின்னு தனியா பேசிட்டு இருக்காங்க, ஆனா Social Media நல்லது இல்லனு சொல்லல, நல்லதா மட்டுமே இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றோம்.

இந்த Thread app-க்கு எதனால இந்த பேரு வச்சிருப்பாங்க, இந்த LOGO-வை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோணுதுன்னு Comment -ல சொல்லுங்க.

Article By Smily Vijay

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.