பட்டாம்பூச்சிய எட்டிப் பிடிக்கும் வயசு 8, அப்போவே சினிமா துறையில சின்னஞ்சிறு வண்ணப் பட்டம்பூச்சியாக தன் பயணத்தைத் தொடங்கினாங்க. 1988 ஏப்ரல் 8 ஆம் தேதி பெங்களூர்ல பிறந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடிகையாக வெற்றி கண்டவர் தான் நித்யா மேனன்.
படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவங்களுக்கு Journalism-ல ஏதாச்சும் சாதிக்கணும்னு ஒரு ஆசை, ஆனா அவங்களே எதிர் பார்க்காத ஒரு விஷயம் 8 வயசுலயே முதல் பட வாய்ப்பு கிடைச்சது தான். The Monkey Who Knew Too Much-ன்னு ஒரு ஆங்கிலப்படம் மூலமா தான் நித்யா மேனன் திரையுலகத்துக்கு அறிமுகம் ஆனாங்க. அதுக்கு அப்புறம் ஒரு குட்டி பிரேக். மறுபடியும் 16 வயசுல 7’O Clock-ன்ற ஒரு கன்னடப்படம் மூலமா சினிமாக்கு comeback-அ கொடுத்தாங்க. அவங்க வாழ்க்கைல நடந்த அந்த ஒரு தருணத்தை நித்யா மேனன் முழுசா நம்புனாங்க, அவங்களுக்கு நடிகைன்னு ஒரு அந்தஸ்தும் வர ஆரம்பிச்சுது.
இயக்குநர் நந்தினி ரெட்டியோட ஆலோசனை மூலம் நடிப்புத்துறையில் நுழைந்து பின்பு அவரோட இயக்கத்துலேயே Alaa Modalaindi படத்துல நடிச்சாங்க. அதுக்கு அப்புறம் நடிகர் சித்தார்த்-க்கு ஜோடியா ‘180’ திரைப்படத்துல அறிமுகமாகி தமிழ்த் திரையுலகத்துல காலடி எடுத்து வைச்சாங்க. பொதுவாவே நித்யா மேனன்னு சொன்ன உடனே நமக்கு firstu “வெப்பம்” திரைப்படத்துல வர ‘மழை வரும் அறிகுறி’ பாடல் தான் ஞாபகம் வரும். அங்க ஆரம்பிச்ச பயணத்த தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்துல “ஓ காதல் கண்மணி” படத்துல தாரா-ன்ற characterக்கு உயிரோட்டம் கொடுத்து தன்னோட நடிப்பு திறமைய மேலும் ஒருபடி உயர்த்துனாங்க.
அப்புறமா தளபதி விஜய் கூட நடிச்ச “மெர்சல்”, உதயநிதி ஸ்டாலின் கூட நடிச்ச “சைக்கோ” போன்ற படங்கள் யாராலையும் மறக்கமுடியாது. அதுமட்டுமில்லாம பலமுறை Best supporting Actress மற்றும் Best Actress விருதுகளும் வாங்கி அசத்தியிருக்காங்க. அவங்கள திரையில் பார்த்தாலெ ரசிகர்கள் Craze ஆகிடுவாங்க.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தினு கிட்ட தட்ட 50 திரைப்படங்களுக்கு மேல நடிச்சிருக்காங்க. நித்யா மேனனோட வாழ்கையில இருந்து தெரிஞ்க்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், நம்ம வாழ்க்கைல நடக்குற நல்ல விஷயங்கள நாம நம்புனா போதும், அது நம்ம வாழ்க்கைக்கு தேவையான எல்லாத்தையும் நமக்கு கொடுக்கும்.