Stories Trending

நிவர் -ஐ கண்டு Shiver ஆக வேண்டாம் !!!

மழையை ரசிக்காத மானிடர் உண்டோ !!!! நிவர் புயலின் தாக்கத்தால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வானிலை ஆய்வு மையம் கனமழை பொழியும் என அறிவித்துள்ளது, என்பது நாம் அறிந்ததே. இந்த சூழலில் நாம் எடுக்க வேண்டிய அத்தியாவசிய முன்னெச்சரிக்கைகளின் தொகுப்பே இப்பதிவு.

நமக்கு சோறு தான் முக்கியம் !!!

மழை பொழிந்தாலும், வெயில் பொளந்தாலும் நம் அத்தியாவசிய தேவைகளுள் முதன்மையானது உணவு தான். இதுபோன்ற மழை காலங்களில் உணவு பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் என்ற காரணத்தால், “மழை வர வாய்ப்புள்ளது” என்ற செய்தியை கேட்டவுடன் அடுத்த ஒரு வாரத்திற்கு தேவைப்படும் உணவுப்பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வீட்டில் Stock வைத்து கொள்வது நல்லது. வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவைப்படும் Milk Powder போன்ற பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

Situation song :

Current உள்ள போதே Charge ஏற்றிக்கொள் !!!

புயல், மழை வரும் சமயங்களில் தேவையற்ற விபத்துக்களை தவிர்க்க மின்தொடர்பு துண்டிக்கப்படுவது வழக்கமே. அது போன்ற சமயங்களில் அத்தியாவசிய தொலைத்தொடர்புக்கு நம் அலைபேசியில் Charge இருக்க வேண்டியது கட்டாயம். மழை மற்றும் புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டவுடன் வீட்டில் உள்ள அலைபேசிகள், Power Bank, மடிக்கணினி போன்றவைக்கு மறக்காமல் Charge செய்து வைத்திருத்தல் வேண்டும்.

ரேடியோ கேளுங்க ! கேட்டுகிட்டே இருங்க !

மழையின் காரணமாக தொலைக்காட்சி, தொலைபேசி, இணையதளம் போன்ற சேவைகள் பாதிக்கப்படுவதை விட ரேடியோ சிக்னல்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு சற்று குறைவு என்ற காரணத்தால், உடனுக்குடன் Update-களை தெரிந்து கொள்ள ரேடியோக்களை தொடர்ந்து கேளுங்கள். மின்வெட்டு ஏற்படும் என்பதால் Battery-ல் செயல்படும் ரேடியோக்களை வைத்துக்கொள்ளுதல் நல்லது. குறிப்பாக நம்ம சூரியன் FM-ஐ தொடர்ந்து கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!!

Suggested Video :

மரங்கள் ஜாக்கிரதை !!!

புயல் நேரங்களிலும் கனமழை காலங்களிலும் ஊர்புறங்களில் உள்ள மரங்கள் சேதமடைய அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதை நாம் உணர்ந்து, நம் வாகனங்களை மரங்களுக்கு அடியில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். மீறி நிறுத்தினால் நம் Vehicle மீது மரங்கள் Volley Ball ஆடிவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தொட்டா Poweru-ங்க, அட சொன்னா கேளுங்க !!!

பஞ்சும் நெறுப்பும் அருகில் இருந்தால் எப்படி “குப்” என்று பற்றிக்கொள்ளுமோ, அதுபோல மழை வந்தால் நம் வீட்டின் Switch போர்டுகளை தொடும்போது “டப்” என ஷாக் அடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே மழை சமயத்தில் ஈரமான Switch Board-களை கைகளை கொண்டு உபயோகிக்காமல், ஏதாவது பிளாஸ்டிக் பொருளை கொண்டு On/Off செய்வது நல்லது.

Situation song :

இதுபோன்ற அத்தியாவசிய முன்னெச்சிரிக்கைகளை நிவர் புயல் மட்டுமின்றி, அனைத்து புயல் / மழை சமயங்களில் எடுத்துக்கொள்வது எல்லோருக்கும் நல்லது. நம்மை பாதுகாத்துக்கொள்வது மட்டுமின்றி, பாதுகாப்பு எச்சரிக்கைகளை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் சொல்லி உதவ மறந்துவிடாதீர்கள்.

இனமென பிரிந்தது போதும் ! மதமென பிரிந்தது போதும் ! மனிதம் ஒன்றே தீர்வாகும் ! லா லா லா !!!!!

About the author

alex lew