தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை பாடல் வெளிவந்துள்ளது.
விஜய் ரசிகர்கள் இப்பாடலை சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்பாடலின் ரிலீஸ் தேதியும் நேரமும் அறிவிக்கப்பட்டபோதே தளபதி ரசிகர்களின் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. அனிருத் – விஜய் கூட்டணியில் அமைந்த இரண்டாவது படம் தான் மாஸ்டர்.
மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தெரிகிறது. கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.
தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோஹனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
தளபதி விஜய் ஒரு பாடலை பாடினால் அது கண்டிப்பாக சூப்பர் ஹிட் பாடலாக தான் இருக்கும். அந்த வகையில் இப்படத்தில் ஒரு குட்டி கதை பாடலை விஜயே பாடியுள்ளார். இப்பாடல் விஜயின் ஹிட் லிஸ்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு குட்டி கதை பாடலின் Lyric விடியோவை கீழே கண்டு மகிழுங்கள்.