Cinema News Specials Stories

பிச்சைக்காரன் 2 -ன் First Look !!!

நடிகர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிச்சைக்காரன் 2 படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அவர் நடித்த ஏதோ ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் அவரது அடுத்த படம் என்பதை விஜய் ஆண்டனி முன்பே அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் இந்த அப்டேட்டுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட்டை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிச்சைக்காரன் 2 படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனரான பிரியா கிருஷ்ணஸ்வாமி இயக்குகிறார். கடந்த ஆண்டு “பாரம்” திரைப்படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றவர் பிரியா கிருஷ்ணஸ்வாமி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்க உள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்திற்கு அவரே இசையமைக்கவும் உள்ளார். இப்படம் 2021 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. அவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசுவாமி போன்ற இயக்குனருடன் விஜய் ஆண்டனி இணைவதால் பிச்சைக்காரன் 2 படத்திற்கு சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது.

இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப்படவுள்ளது. தெலுங்கில் “பிச்சகாடு 2” என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் ரசிகர்களுக்கு இப்படத்தின் அப்டேட் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. வெளியான சில மணித்துளிகளில் இருந்தே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பல பிரபலங்களும் ரசிகர்களும் பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை #Pichaikkaran2 எனவும் விஜய் ஆண்டனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தும் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். #Pichaikkaran2 டேக் ட்ரெண்டிங் No.1 ல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

About the author

Santhosh