2014-ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திகில் படம் “பிசாசு”. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆண்ட்ரியாவின் பிறந்தநாளான இன்று ( Dec 21 ) இயக்குனர் மிஷ்கின் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஆண்ட்ரியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் இருந்தே சினிமா ஆர்வமுள்ள நெட்டிசென்கள் இதை பெரிதளவில் பகிர்ந்து வருகின்றனர்.
மிஷ்கின் வெளியிட்டுள்ள பதிவில் ” மெழுகுவர்த்தியின் ஒளியை ஏற்றி, நம் கதையின் கதாநாயகியின் பிறந்தநாளை கொண்டாடுவோம் ” எனக் கூறியுள்ளார். மிஷ்கின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை ஆண்ட்ரியா தனது பக்கத்தில் Retweet-ம் செய்துள்ளார். மிஷ்கினின் பதிவை கீழே காணுங்கள்.
பிசாசு 2-வின் போஸ்டரில் ஆண்ட்ரியாவின் தோற்றம் சற்று வித்தியாசமாகவும், விநோதமாகவும் இருக்கிறது. இந்த போஸ்டரில் ஆண்ட்ரியா தன் தலையில் Scarf கட்டிய படி புருவங்களை தூக்கி ஒரு சாந்தமான நிலையில் அமர்ந்துள்ளார். இந்த புகைப்படம் 80’s / 90’s-களில் எடுக்கப்பட்டது போன்ற கருப்பு வெள்ளை புகைப்படமாக இருக்கிறது. ஆண்ட்ரியாவின் இந்த தோற்றம் திகில் படங்களுக்கென்றே உரிய ஒரு மாறுபட்ட தனிப்பட்ட எதிர்பார்ப்பை நம்மிடம் ஏற்படுத்துகிறது.
படப்பிடிப்பு முடிந்து இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மிஷ்கின் படங்களில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. பிசாசு 2-வும் ரசிகர்களை இருக்கையின் முனையில் அமர வைத்து படம் பார்க்க வைக்கும் என எதிர்பார்க்கலாம். இப்படத்திற்கு இளையராஜாவின் புதல்வனான கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
ஆண்ட்ரியாவிற்கு மட்டுன்றி அவரது ரசிகர்களுக்கும் இந்த போஸ்டர் Update பிறந்தநாள் Treat-ஆக அமைந்துள்ளது. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திறமையான நடிகைகளுள் ஒருவரான ஆண்ட்ரியாவிற்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.