Playboyஅப்டிங்குற வார்த்தை உலகளவுல பிரபலமான வார்த்தை. உலகம் முழுக்க இருக்க பெரும்பான்மையான மக்கள் இந்த வார்த்தைய நிச்சயம் கேட்டிருப்பாங்க. இந்த வார்த்தை இவ்வளவு பிரபலமாக முக்கியமான ஒரு காரணம் ‘ப்ளே பாய்’ பத்திரிகை.
இந்த நிறுவனம் உருவான சுவாரஸ்யமான கதைய தான் இப்ப நான் உங்களுக்கு சொல்ல போறேன். வழக்கமான பணக்காரர்களுடைய கதை தான் இவரோடதும். ’ஹியூ ஹெப்னர்’ ஆரம்பத்துல Esquire அப்படிங்குற ஆண்களுக்கான வார இதழ்ல Copy Writer-ஆ வேலை செஞ்சிட்டு இருக்கார். இந்த சமயத்துல இவர் புதுசா தனக்கு தோணக்கூடிய யோசனைகள தனது மேலதிகாரிகள் கிட்ட சொல்றாரு. ஆனா அவருடைய யோசனைகள மேலதிகாரிகள் மதிக்கல.
அதுக்கு பிறகும் அங்க வேலை செய்றாரு ஹியூ ஹெப்னர். ஒரு கட்டத்துல ஊதிய உயர்வு கேக்குறாரு. அதயும் அந்த நிறுவனம் தர மறுத்துடுறாங்க. அடுத்த நிமிஷம் வேலைய விட்டு வெளிய வராரு. வேலைய விட்டு வந்த பிறகு கொஞ்ச நாள் மிகுந்த மன அழுத்தத்துல இருக்காரு. ஒரு கட்டத்துல அமைதியான பின்னாடி நம்மளே ஏன் ஒரு பத்திரிகைய உருவாக்க கூடாதுனு யோசிக்குறாரு.
எப்படியாவது நம்ம நினைச்ச மாதிரி ஒரே ஒரு பத்திரிகையாவது அச்சடிச்சு வித்துடனும், எவ்ளோ செலவானாலும் பரவால. அது மட்டும் பண்ணிட்டா போதும் அதுக்கப்பறம் என்ன ஆனாலும் கவலையில்லனு முடிவு பண்றாரு. வீட்ல, தெரிஞ்சவங்க, நண்பர்கள், சொந்தக்காரர்கள்னு எல்லார்கிட்டயும் கேட்டு 8000 அமெரிக்க டாலர்கள் கடன் வாங்குறாரு.
காசு ரெடி பண்ணினதும் பத்திரிகை எப்டி வரனும்னு முடிவு பண்ணி அதுல வரக்கூடிய விஷயங்கள் அனைத்தையும் எழுதி முடிக்குறாரு. அடுத்து பத்திரிகைக்கான அட்டைப்படம் பத்தி யோசிக்குறாரு. மாடலிங்கில் இருக்கும் பெண்கள் பலர வச்சு படம் எடுத்து பாக்குறாரு. அவர் எதிர்பார்த்த மாதிரி படங்கள் சரியா அமையல. அப்போ அந்த சமயத்துல பிரபலமா இருந்த மர்லின் மன்றோ ஒரு காலண்டருக்காக நிர்வாணமா போஸ் குடுத்துருந்தாங்க.
இந்த விஷயத்த கேள்விப்பட்ட ஹியூ ஹெப்னர் மர்லின் மன்றோவ போட்டோ எடுத்த புகைப்படக்காரர்கிட்டெ பேசி 50 டாலர் குடுத்து அந்த புகைப்படங்கள வாங்குறாரு. மர்லின் மன்றோவ வச்சு அட்டைப்படத்த ரெடி பண்றாரு. மர்லின் மன்றோவுடைய நிர்வாண படத்த நடுபக்கத்துல வச்சு புத்தகத்த அச்சடிக்குறாரு. கிட்டத்த்ட்ட 50,000 பிரதிகள் அச்சடிச்சு கடைகள்ல குடுத்துட்டு வர்றாரு.
இதுல என்ன ஸ்பெஷல்னா ஹியூ ஹெப்னர் பத்திரிகைல எந்த தேதியும் போடல. ஏன்னா எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு புத்தகத்தை வெளியிடனும் அப்படிங்குறது மட்டும் தான் ஹியூவோட குறிக்கோளா இருந்துச்சு. தொடர்ந்து இந்த இதழ கொண்டு வரணும் அப்படிங்குற எண்ணம் அவருக்கு இல்ல. அதனால தேதி போடல. அதுமட்டுமில்லாம 1950-கள்ல பத்திரிகைல ஆண்களின் ஆதிக்கம் தான் அதிகமா இருந்துச்சு.
அத மாத்துற விதமா அட்டைப்படத்துல மட்டுமில்லாம புத்தகத்துக்கு உள்ளேயும் பெண்களின் படங்கள் இருக்குற மாதிரி ஹியூ புத்தகத்த உருவாக்கியிருந்தாரு. ஒரு சில நாள்ல ஹியூ ஹெப்னருக்கு அழைப்பு வருது. ப்ளே பாய் புத்தகங்கள் எல்லாமே வித்துடுச்சு…
இன்னும் எங்களுக்கு பிரதிகள் வேணும்னு கடைக்காரர்கள் கேக்குறாங்க. பணம், புகழ், பெண்கள்னு அங்க ஆரம்பிச்ச ஹியூ ஹெப்னரோட வாழ்க்கை 2017-ல அவர் இறக்குற வரை தொடர்ந்துச்சு. ப்ளேபாய் பத்திரிகை இப்பவரைக்கும் பிரபலமான ஒன்னா தான் இருக்கு. இதுதான் ப்ளேபாய் நிறுவனம் உருவான கதை.
இதுக்கு நடுல ஹியூ ஹெப்னரோட வாழ்க்கைல இருந்து வெளியுலகத்துக்கு தெரிய வந்த நிறைய சர்ச்சைகள், அவர் பழகிய பெண்கள் அவர் மீது வச்ச குற்றச்சாட்டுகள்னு எதிர்மறையா நிறைய விஷயங்கள் இருந்தாலும், தான் நினைச்சதை வாழ்க்கைல ஒரு முறையாவது செஞ்சு பாக்கனும்னு அன்னைக்கு அவர் எடுத்த முடிவு தான் இன்னைக்கும் அவர பத்தி நாம பேசிட்டிருக்க காரணமா அமைஞ்சிருக்கு.