எம்.ஜி.ஆர் காலத்துல இருந்தே கல்கி எழுதிய பொன்னியன் செல்வன் கதைய படமா எடுக்கணும்னு பல முயற்சிகள் நடந்துது. அப்படி பல வருஷம் போராட்டத்துக்கு அப்புறம் இறுதியா நம்ப எல்லாரோட மனம் கவர்ந்த இயக்குனர்கள்ல ஒருத்தரான மணிரத்னம் இயக்கத்துல பொன்னியின் செல்வன் படம் நம்ப கண்களுக்கு விருந்தா அமைஞ்சது.
ஆரம்பத்துல படத்தோட அறிவிப்பே பெரிய அளவுக்கு எதிர்பார்ப்ப ஏற்படுத்துச்சு. பொன்னியின் செல்வன் நாவல பொறுத்த வரைக்கும் முழுக்க முழுக்க வரலாறை மட்டுமே கொண்ட ஒரு நூல் இல்ல. கல்கி அவர்களோட கற்பனையும் அதுல கலந்து இருக்கு. அருள்மொழி வர்மனா ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனா விக்ரம், வந்தியத்தேவனா கார்த்தி, நந்தினியா ஐஸ்வர்யா ராய், ஆழ்வார்கடியான் நம்பியா ஜெயராம் அப்டினு எல்லாரும் அந்தந்த Character-ல நடிச்சிருக்காங்க அப்டின்றதயும் தாண்டி வாழ்ந்துருப்பாங்க…
அதுலயும் முதல் பாகத்தோட வெற்றியே இரண்டாம் பாகத்துக்கு விளம்பரமா அமைஞ்சது. கதைக்குள்ள வர வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் இடைல வர காதல் காட்சிகளா இருக்கட்டும், ஆதித்த கரிகாலன் வரக் கூடிய காட்சிகளா இருக்கட்டும் ரொம்பவே ரசிக்கிற வகைல படமாக்கபட்டுருந்துச்சு. அதுலயும் நந்தினிய அவ்ளோ அழகா படத்துல காட்டியிருப்பாங்க.
குறிப்பா இசை புயலோட இசை இரண்டாம் பாகத்துக்கு பெரிய அளவுக்கு பலமா அமைஞ்சுது. பிரம்மாண்ட கடம்பூர் மாளிகையோட ஒளிவிளக்குகள் சூழ்ந்த அந்த அறைல வாளோட நிக்குற நந்தினிகிட்ட தன்னோட உயிர துச்சமா நினைச்சு கரிகாலன் பேசுற காட்சியும், அதுக்கு ரவிவர்மன் கேமரா தூரிகையால தீட்டியிருக்கும் ரம்மியமான ஃப்ரேமும், பின்னணில ‘சின்னஞ் சிறு நிலவே’ பாடலின் கோரஸும் ரசிக்க கூடியதா இருந்துது.
மத்தபடி VFX,பிரம்மாண்ட Set, CG work, Character design எல்லாத்துலயும் மெனக்கெடல் தெரிஞ்சுது. நாவல்ல கொல்லப்பட்ட கதாபாத்திரங்கள் படத்துல உயிரோட வருவதும், புனையப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சியும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்கான மணிரத்னத்தின் புனைவுகள்னே சொல்லலாம். மொத்தத்துல பொன்னியின் செல்வன் பாகம் – 2 மணிரத்னத்தால உருவாக்கப்பட்ட அழிக்க முடியாத வரலாற்று காவியம் இல்ல, வரலாற்று பொக்கிஷம்.