ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதநாயகர்களாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் , இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது .
இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிரி ஏழுடா’ என்ற பாடலில் “AI” தொழிநுட்பம் மூலமாக மறைந்த பின்னணி பாடகர்களான பாம்பா பாக்யா மற்றும் ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் குரல்களை மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்தி உள்ளார்.
எப்பொழுதுமே தனது இசைகளில் பல்வேறு புது முயற்சிகளை முயற்சி செய்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், தான் இசையமைக்கும் இத்திரைப்படத்தில் வரும் பாடலில் “AI மூலம் மறைந்த பாடகர்களின் குரலை மறுஉருவாக்கம் செய்திருப்பது மொத்த இசை உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் மறைந்த பாடகர்களின் குரலை மீண்டும் உயிர்ப்பிப்பது தொழில்துறையில் இதுவே முதல் முறையாகும்.
ஊர்வசி ஊர்வசி”, பேட்டா rap உட்பட பல பாடல்களை ரஹ்மான் இசையில் பாடிய ஷாகுல் ஹமீத் 1997ஆம் ஆண்டு ஒரு Car விபத்தில் காலமானார். பம்பா பாக்யா ஒரு தமிழ் பின்னணி பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். அவர் 2022-ல் மாரடைப்பால் காலமானார். பம்பா பாக்யாவும் ரஹ்மானுக்காக புல்லினங்கால் , சிம்டாங்காரன் போன்ற ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
திமிரி ஏழுடா’ பாடலை கேட்கும் பொழுது பாம்பா பாக்யா மற்றும் ஷாஹுல் ஹமீத் இருவரின் குரல்களை அச்சு அசலாக கொண்டாடுவது மட்டுமில்லாமல், அவர்களே பாடின உணர்வையும் பெறலாம் என்கின்றனர் ரசிகர்கள். மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்தியதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று அதற்கு தகுந்த ஊதியத்தை கொடுத்திருக்கிறோம்.
தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் அதில் அச்சுறுத்தலும் தொல்லையும் இல்லை என்று “AI ” தொழிநுட்பத்தை பயன்படுத்தியது குறித்து தன் கருத்தை X தளத்தில் பதிவிட்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். என்ன தான் மறைந்தவர்களின் குரல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் , ரஹ்மானின் இந்த முடிவ இணையத்தில் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது.
பாடகர்களின் குடும்பத்தினரிடம் ரஹ்மான் அனுமதி கேட்டதை பலர் பாராட்டினாலும், சிலர் அதை ‘நெறிமுறையற்ற’ செயல் என்று விமர்சித்துள்ளனர். “AI” தொழிநுட்பம் எந்தளவிற்கு திரையுலகிலும் , இசையுலகிலும் ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.