இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் தலைமையில் எஸ்.பி.பி அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்காக திரையுலக பிரபலங்கள் அனைவரும் திரண்டு கூட்டுப்பிரார்த்தனை செய்துள்ளனர். அந்த பிரார்த்தனையில் எஸ்.பி.பி அவர்கள் மீண்டு வரவேண்டி தங்களது வேண்டுதல்களையும், அவருடன் இருந்த இனிமையான நினைவுகளையும் திரையுலகினர் பகிர்ந்துள்ளனர்.
இந்த பிரார்த்தனையில் இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரபு, சரோஜாதேவி, கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் அமீர், சிவகுமார், சின்னக்குயில் சித்ரா, பாடகர் மனோ, கே.எஸ் ரவிகுமார், சரத்குமார், கங்கை அமரன், தங்கர்பச்சன், பார்த்திபன், கௌதமன், இயக்குனர் எஸ்.சந்திரசேகர், மனோபாலா ஆகியோர் பங்கேற்றனர்.
எஸ்.பி.பி அவர்களுக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனையில் திரையுலக பிரபலங்கள் எஸ்.பி.பியை பற்றி கூறியதை கீழே காணலாம்.
“நமது பிரார்த்தனையில் நம்மிடம் மீண்டும் எஸ்.பி.பி எழுந்து வருவான், என் கலைக் குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் எதுவும் வரக்கூடாது.”
– பாரதிராஜா
“75 படத்தில் வில்லனாக நடித்த என்னை, டூயட் பாடி நடித்து மக்கள் பார்த்ததுக்கு பாலு சார் தான் காரணம்.”
– சத்யராஜ்
“அப்பா இருந்திருந்தால், அவரும் இந்தப் பிரார்த்தனைக்கு வந்திருப்பார். எஸ்.பி.பி அவர்கள் கண்டிப்பாக மீண்டு வருவார்.”
– பிரபு
“எங்க பாலு சீக்கிரம் வரணும் மறுபடியும் அவர் வந்து பேசணும் பாடணும்.”
– சரோஜா தேவி
Legendary Actress #BSarojadevi Madam Prays for Speedy Recovery of #SPBalasubrahmanyam sir
— Nikil Murukan (@onlynikil) August 20, 2020
To get well soon #GetWellSoonSPBSIR @charanproducer @offBharathiraja #News23 #NM#NikilMurukan pic.twitter.com/9iMCbzBByr
“தேகபலம், பாத பலம், ஆயுள் பலம் பெற்று நலமாக எஸ்.பி.பி அவர்கள் மீண்டுவந்து வாழ்வார்கள்.”
– கலைப்புலி எஸ். தாணு
“எஸ்.பி.பியின் குரல் தனிமனிதரின் குரல் அல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் குரல்.”
– அமீர்
“45000 பாட்டு பாடினால் அவன் சுவாசமே பாட்டாக வந்திருக்கிறதுனுஅர்த்தம்.”
– சிவகுமார்
“இவ்வளவு பிரார்த்தனைகள் இருக்கும் போது கண்டிப்பாக எஸ்.பி.பி சார் திரும்ப வருவார்.”
– சின்னக்குயில் சித்ரா
“அண்ணன் 100% திரும்ப வருவார் என நான் நம்புகிறேன்.”
– மனோ
“இந்தக் கூட்டுப் பிரார்த்தனையின் பலனாக பாலு சார் கண்டிப்பா திரும்ப வருவார்.”
– கே.எஸ். ரவிக்குமார்
“இறைவன் அருளால் பாலு சார் கண்டிப்பாக திரும்ப வருவார்.”
– சரத்குமார்
“பாலு மீண்டு வந்து நம்ம எல்லாரும் சேர்ந்து கச்சேரி நடத்தப் போகிறோம்.”
– கங்கை அமரன்
“எஸ்.பி.பி அண்ணன் பாடுன எல்லா பாட்டையும் தினமும் 2 மணி நேரம் கேட்பேன், நம்ம பிரார்த்தனைகளின் வலிமை எஸ்.பி.பி அண்ணன மீட்டுக் கொண்டுவரும்.”
– தங்கர்பச்சன்
“அவர் பாட்டுக்கு அடிமையான ரசிகர்களின் கூட்டு பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும். பாடகர் ஆகுறது சுலபம் ஆனா எஸ்.பி.பி மாதிரி பண்பாளர் ஆகிறது கஷ்டம்.”
– பார்த்திபன்
“தூக்கம் வராதவர்களுக்கு தூக்கம் வர தாலாட்டு பாடிய எஸ்.பி.பி அவர்கள் நிச்சயம் மீண்டு வருவார்.”
– கௌதமன்
“நம்ம வேண்டுதலை கடவுள் கேட்டுக்குட்டு இருக்கார், நிச்சயம் ஒரு அதிசயம் நடந்து எஸ்.பி.பி மீண்டு வருவார்.”
– எஸ். ஏ. சந்திரசேகர்
Actor & Director @manobalam ’s appeal and request to come together & Pray for Speedy Recovery of #SPBalasubrahmanyam sir
— Nikil Murukan (@onlynikil) August 19, 2020
To get well soon #GetWellSoonSPBSIR @charanproducer @offBharathiraja #News23 #NM#NikilMurukan pic.twitter.com/4FNanmmnxR
இவர்கள் மட்டுமின்றி எஸ்.பி.பி அவர்களின் கோடான கோடி ரசிகர்களும் அவர் உடல் நலம் பெற்று சீக்கிரம் வீடு திரும்ப வேண்டி தங்களது பிரார்த்தனைகளை தங்களது இல்லங்களில் இருந்தவாறு செய்துள்ளனர். அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க அதிசயம் நிகழ்ந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பூரண குணமடைய சூரியன் FM சார்பிலும் வேண்டிக் கொள்கிறோம்