Cinema News Stories Trending

எஸ்.பி.பி -க்காக வேண்டும் பிரபலங்கள் !!!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா  நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திரையுலக பிரபலங்கள் பலரும் அவர் நோயிலிருந்து மீண்டு வர வேண்டும் என தங்களது வேண்டுதலை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இசையமைப்பாளர் தேவா அவர்களும் எஸ்.பி.பி சீக்கிரம் குணமடைய வேண்டும் என வேண்டி வீடியோவில் பேசி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். ஏற்கனவே இசைஞானி இளையராஜா அவர்கள் இது போன்ற வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் தேவா வெளியிட்டுள்ள வீடியோவில், எஸ்.பி.பி அவர்கள் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப தான் தினமும் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். அந்த வீடியோவில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும், எஸ்.பி.பி-யின் உடல் நலம் சீக்கிரம் பூரண குணமடைய வேண்டும் என வேண்டி பேசியுள்ளார். இசையமைப்பாளர் தேவா வெளியிட்ட வீடியோவை கீழே காணுங்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், 50 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி.பி அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று அபாய கட்டத்தை தாண்டி உள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சூரியன் FM  சார்பிலும் வேண்டிக் கொள்கிறோம்.

About the author

alex lew