மன்மதலீலை பட வெளியீட்டை முன்னிட்டு அப்படத்தின் இசையமைப்பாளர் பிரேம்ஜி சமீபத்தில் சூரியன் FM நேர்காணலில் பங்குபெற்றார்.
அப்போது அவரிடம் பிரேம்ஜியின் ஒருநாள் எப்படி இருக்கும் என்று கேள்வியெழுப்பினோம். அதற்கு பதிலளித்த பிரேம்ஜி, “வேலையிருக்கும் நாட்கள் நேரம் பார்த்து திட்டமிட்டபடி போகும். வேலை, வேலை முடிந்து வீடு, வெளியூரில் இருந்தால் ஹோட்டல், நண்பர்கள், தூக்கம், அடுத்த நாள் வேலை என்று இருக்கும்.
வேலையில்லாத நாட்களில் நேரத்த மதிக்க மாட்டேன். எனக்கு எவ்வளவு நேரம் தூங்கனுமோ அவ்வளவு நேரம் தூங்குவேன். தூக்கம் போதும்னு நினைக்கும் போதுதான் எழுந்திருப்பேன். சூரியன் வரும்போது எழுந்திரிக்கனும்னு நினைக்க மாட்டேன். Time-அ மறந்துருவேன். Holiday-ல இருக்க மாதிரி இருப்பேன்.
வாரம் முழுக்க Wait பண்ணி Weekend-ல பார்ட்டி பண்ணனும்னு இருக்க மாட்டேன். எனக்கு தோன்றத பண்ணிட்டு ஜாலியா வீட்ல பிடிச்ச படத்த பாத்துட்டு No rules-னு வாழ்ந்துட்டு இருப்பேன். இது எல்லாமே வேலையில்லாத நாட்களில் மட்டும்தான்” என்று கூறினார்.
மேலும் மன்மதலீலை படத்திற்கு இசையமைத்தது குறித்த சுவாரஸ்யமான பல விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
முழு நேர்காணலை கீழுள்ள இணைப்பில் காணுங்கள் :