அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்த ஹாஸ்டல் திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இருவரும் சூரியன் FM நேர்காணலில் பங்கேற்றனர்.
இருவரது நிஜ வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான பல ஹாஸ்டல் அனுபவங்கள் குறித்து அவர்களிடம் பேசினோம். அப்போது, உங்களுடைய காலேஜ் வாட்ஸப் க்ரூப்பின் பெயர் என்ன? என்று கேள்வியெழுப்பினோம். அதற்கு முதலில் வேண்டாம் என ப்ரியா பவானி சங்கர் பதிலளிக்க மறுத்தார்.
அசோக் செல்வன் எங்களுடைய க்ரூப் பெயர் ‘Loyola Vetties’ என்று கூறினார். இதையடுத்து பதிலளித்த ப்ரியா பவானி சங்கர், “எங்களுடைய காலேஜ் வாட்ஸப் க்ரூப் பெயர் ‘ஜல புல ஜில்ஸ்’, நாங்கள் Facebook-ல் Open group & Close group என இருப்பது கூட தெரியாமல் ‘ஜல புல ஜில்ஸ்’ என Open group ஒன்றை உருவாக்கி வைத்திருந்தோம்.
இந்த க்ரூப் Open-ஆ இருக்குனு எங்களுக்கு தெரியுறதுக்கே 1 மாசமாச்சு. அப்புறம் இந்த விஷயம் தெரிஞ்சு Group-அ Close பண்ணோம். இப்ப Private-ஆ வாட்ஸப்ல வாழ்ந்துட்டு இருக்கோம். இந்த விஷயத்த சொன்னதுக்கு என் Friends என்ன சாவடிக்க போறாங்க” என்று கூறினார்.
தொடர்ந்து ஹாஸ்டல் வாழ்க்கை குறித்த பல்வேறு நகைச்சுவையான விஷயங்களை இருவரும் நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.
முழு நேர்காணலை கீழுள்ள இணைப்பில் காணுங்கள் :