திரையுலகின் பிரம்மாண்ட பாகுபலியான பிரபாஸ் நடிக்கவுள்ள ராதே ஷியாம் திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய Update வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகிறது.
இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இப்படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை குறித்த முதல் அறிவிப்பு வந்ததிலிருந்தே, இப்படக்குழுவில் யாரெல்லாம் இருக்க போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர்களை குறித்த Update-ஐ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் ஹிந்தி Version-ற்கு இசையமைப்பாளர்கள் மிதுன் மற்றும் மணன் பரத்வாஜ் இணைந்து இசையமைக்கவுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கு பிரபல இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார்.
இந்த அறிவிப்பை ஒரு மாறுபட்ட முறையில் வித்யாசமான போஸ்டராக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்திய வரைபடத்தில் வட இந்தியாவின் பகுதியில் இசையமைப்பாளர்கள் மணன் பரத்வாஜ் மற்றும் மிதுனின் பெயரும் தென்னிந்திய பகுதியில் ஜஸ்டின் பிரபாகரன் பெயரும் ஒரு பூதக்கண்ணாடியில் தெரியும் படி போஸ்டர்-ஐ வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர்-ஐ ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த போஸ்டர் அடங்கிய Tweet-ஐ கீழே காணுங்கள்.